ஈசிஜி கோடுகள் நேராக நின்றன! ரத்தன் டாடாவுக்கே உரித்தான வரிகள்! வேதனையிலும் வேதனை
மும்பை: ரத்தன் டாடா கூறிய பொன்மொழிகள் இன்று அவருக்கே பொருந்தியுள்ளது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரத்தன் டாடாவின் அசுர வளர்ச்சிக்கு அவருடைய துணிச்சலும் தன்னம்பிக்கையும்தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் காலமாகிவிட்டார். சாமானிய மனிதர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரின் உள்ளங்களிலும் அவர் நிறை்நதிருக்கிறார்.

அவரது தொழிலை போல் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது. இவர் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்துள்ளார். இதற்கு பின்பும் ஒரு கதை இருக்கிறது. ரத்தன் டாடாவின் பெற்றோர் அவருடயை 10 ஆவது வயதில் விவாகரத்து செய்து விட்டனர். இதனால் அவரும் அவருடைய சகோதரரும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தனர்.
டாடாவின் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் இருவரையும் சக மாணவர்கள் மிகவும் மோசமாக விமர்சித்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் எந்த சூழல் வந்தாலும் கண்ணியத்துடன் எப்படி வாழ வேண்டும் என்பதை தனது பாட்டி கற்றுக் கொடுத்ததாக சொல்லியிருந்தார்.
டாடாவுக்கு செல்லப் பிராணிகள் மீது அலாதியான பிரியம். நாய்கள் மீது அளவுக் கடந்த அன்பை வைத்திருந்தார். அதன் வெளிப்பாடுதான் இன்று ரத்தன் டாடா உடலை விட்டு கோவா எனும் வளர்ப்பு நாய் எங்கும் நகராமல் அவரது உடலுக்கு பக்கத்திலேயே இருந்தது.
சாமானியர்களும் பயன்படுத்தும் வகையில் ரூ 1லட்சத்திற்கு டாடா நானோ காரை அறிமுகம் செய்து வைத்தார். அதை தயாரிக்கும் செலவு அதிகரித்திருந்த நிலையில் கூட அவர் விலையை ஏற்ற மறுத்துவிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
அதை தவிர்க்குமாறு தனது பதிவின் மூலம் கேட்டுக் கொண்டார். விருதுகளை பெறுவதை விட தான் ஒரு இந்தியனாக இருக்கவே விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட ரத்தன் டாடா தன் வாழ்வில் வளர்ச்சி அடைய 3 முக்கிய பொன்மொழிகளை கடைப்பிடித்து வந்துள்ளார். ரிஸ்க் எடுக்காததுதான் பலர் வாழ்க்கையில் எடுக்கும் மிகப் பெரிய ரிஸ்க். வேகமாக செல்ல விரும்பினால் தனியே செல்லுங்கள். நீண்ட தூரம் செல்ல விரும்பினால் சேர்ந்து செல்லுங்கள்.
வாழ்வின் ஏற்ற இறக்கமே நம்மை முன்னுக்கு கொண்டு செல்லும். ஈசிஜியில் கோடு நேராக இருந்தால் நாம் இறத்துவிட்டதாக அர்த்தம் என வாழ்க்கையின் தத்துவங்களை பொன்மொழியாக உதிர்ந்துள்ளார். அது போல் அவர் எதற்கெல்லாம் வெட்கப்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பழைய உடைகள், எந்த உடையும் ஒருவரின் திறமையை தீர்மானிக்காது. ஏழை நண்பர்கள், நட்பில் ஸ்டேட்டஸ் என்ற ஒன்று கிடையாது. அழகில்லாத பெற்றோர், அவர்கள்தான் நீங்கள் இன்று இருப்பதற்கு காரணம். எளிய தோறறம்- வெற்றியை ஒருபோதும் தீர்மானிக்காது என ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். இவருடைய சொத்த மதிப்பு ரூ 3800 கோடி என்று 2022 ஆம் ஆண்டு வெளியானது. டாடா திருமணம் செய்து கொள்ளாததால் அடுத்த வாரிசு யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications