ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற்றுவிட்டு ரூ.1000 நோட்டுகள் கொண்டுவர திட்டமா? ஆர்பிஐ விளக்கம்
மும்பை: 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுவிட்டு புதிய 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வரும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பணவீக்கத்திற்கு ஏற்ப, அதாவது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதம் (வங்கிகளுக்கு வழங்கப்படும் பணத்திற்கான வட்டி விகிதம்) ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆர்பிஐ அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறவோ அல்லது ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தவோ யோசிக்கவே இல்லை. தயவு செய்து இது போன்று யூகங்களை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அதிக மதிப்புள்ள கரன்சியை திரும்பப் பெறுவதாக அறிவித்ததில் இருந்து, புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளில் சுமார் 50% மீண்டும் வங்கி முறைக்கு வந்துள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூட்டத்ல் தெரிவித்தார்.
கடந்த மாதம் திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 கரன்சி நோட்டுகளில் பெரும்பாலானவை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி முறைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். மார்ச் 31, 2023 நிலவரப்படி, ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
"இதுவரை, திரும்ப பெறுகிறோம் என்ற அறிவிப்புக்குப் பிறகு ரூ. 1.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளில் 85% வங்கிக் கணக்குகளில் டெபாசிட்களாக வருகின்றன, இது எதிர்பார்ப்புக்கு ஏற்ப உள்ளது என்றார்.
கடந்த மே 19 அன்று, ரிசர்வ் வங்கி அ 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது . அத்துடன் மே 23 முதல் அத்தகைய நோட்டுகளை (ஒரே நேரத்தில் ரூ. 20,000 வரை ரொக்கமாக) மாற்ற அனுமதித்தது. வங்கியில் டெபாசிட் செய்யவும், ரொக்கமாக மாற்றவும் செப்டம்பர் 30, 2023 வரை ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications