"ரெட் அலர்ட்".. மிரட்டும் பேய் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. தத்தளிப்பில் மும்பை
மும்பையில் கனமழைக்கு 30 பேர் பலியாகி உள்ளனர்
மும்பை: அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அண்மையில் சில தினங்களாக பலத்த மழை நீடிக்கிறது.
இதில் கடந்த சில தினங்களாகவே மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது... இதனால் மும்பை நகரமே நீரில் தத்தளித்து கிடக்கிறது.. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் உள்ளது... இதனால் ரயில் உட்பட அனைத்து போக்குவரத்துகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவு
பெரும்பாலான தண்டவாளங்கள் மூழ்கியதால் நீண்ட தூர ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுவிட்டன.. மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது... வீடுகள், சுற்றுசுவர்கள் இடிந்து விழுந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.. உயிரிந்தவர்களின் குடும்பத்துக்கு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நிவாரணம்
இதுபோல், விக்ரோலி, செம்பூர் பகுதியில் நடந்த விபத்துக்களில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.. மும்பையில் பெய்த மழை காரணமாக பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகமும் எச்சரித்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு
இந்நிலையில், மும்பையில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மும்பைக்கு கனமழைக்கான 'சிகப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.. மேலும், பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

எச்சரிக்கை
அதேபோல, தலைநகர் டெல்லியிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட வடமாநிலங்களில் மேலும் சில தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications