உடையும் பாஜக கூட்டணி? ரிசார்ட்டிற்கு ஓடிய சிவசேனா! "அந்த" பதவி நிச்சயம் ஷிண்டேவுக்கு வேண்டுமாம்
மும்பை: மும்பை உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மீண்டும் அரசியல் விளையாட்டுகளும் ரிசார்ட் அரசியலும் ஆரம்பித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்பு தனது கவுன்சிலர்களை அங்குள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கு என்ன காரணம்.. அங்கு இப்போது என்ன நிலைமை என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் தான் மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தாக்கரேவின் கோட்டையாக மும்பை இருந்த நிலையில், அதைக் காலி செய்து பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றது. இருப்பினும், தனிப்பெரும்பான்மையைப் பெற பாஜக தவறிவிட்டது.

மும்பை ரிசார்ட் அரசியல்
இந்தச் சூழலில் மும்பையில் மீண்டும் ரிசார்ட் அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது கட்சியின் கவுன்சிலர்களை மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.. தனது கட்சியை கவுன்சிலர்கள் பிற கட்சிகளுக்குத் தாவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மும்பை உள்ளாட்சித் தேர்தலில், பாஜக-சிவசேனா கூட்டணி அபார வெற்றி பெற்ற போதிலும், முன்பே சொன்னது போல எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக அங்கு அதிகாரத்தைப் பிடிக்க சிவசேனா ஆதரவு தேவை. இதனால் சிவசேனா கிங் மேக்கராக மாறியிருக்கிறது. இதை வைத்து மேயர் பதவியைக் கேட்டுப் பெற வேண்டும் என்று ஷிண்டே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே தனது கவுன்சிலர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளது ஷிண்டே சிவசேனா.
நம்பர்கள் சொல்வது என்ன
மும்பையைப் பொறுத்த வரை அங்கு மொத்தம் 227 வார்டுகள் உள்ள சூழலில், அதிகாரத்தைக் கைப்பற்ற 114 இடங்கள் தேவை. இதில் பாஜக 89 இடங்களையும், ஷிண்டே சிவசேனா 29 இடங்களையும் வென்றுள்ளது. இவ்விரு கட்சிகளும் இணைந்து மொத்தம் 118 இடங்களைப் பெறுவதால் மேஜாரிட்டி ஈஸியாக கிடைக்கும். தனித்துப் போட்டியிட்ட துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றது.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் தரப்பில், தாக்கரே சிவசேனா 65 வார்டுகள் மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா 6 இடங்களிலும் வென்றன. என்சிபி (சரத் பவார்) ஒரு இடத்தையும் கைப்பற்றியது. இதன் மொத்த பலம் 72ஆக உள்ளது. காங்கிரஸ் 24 வார்டுகளிலும், மஜ்லீஸ் கட்சி எட்டு வார்டுகளிலும், சமாஜ்வாதி கட்சி இரண்டு வார்டுகளிலும் வென்றன.
எதிர்க்கட்சி கூட்டணி
பாஜக தலைமையிலான கூட்டணி மும்பையைக் கைப்பற்றுவதைத் தடுக்க, ஒட்டுமொத்த எதிர்க்கட்சி முகாமும் ஒன்றுசேர முடிவெடுத்தால், அவர்களின் பலம் 106 ஆக உயரும். இது பெரும்பான்மை நம்பரான 114ஐ விட 8 இடங்கள் மட்டுமே குறையும். இதன் காரணமாகவே எங்கு ஷிண்டே தரப்பினரை எதிர்க்கட்சிகள் இழுக்குமோ என்ற அச்சம் ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி 8 கவுன்சிலர்களை எதிர்க்கட்சிகள் தங்கள் வசம் இழுத்துவிட்டால் பாஜகவால் மும்பையைக் கைப்பற்ற முடியாத சூழல் ஏற்படும்.
மேயர் பதவி நிச்சயம் வேண்டும்
மும்பையைப் பொறுத்தவரை அது கடந்த காலங்களில் ஒருங்கிணைந்த சிவசேனாவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. கடந்த 1996 முதலே சிவசேனாவை சேர்ந்த ஒருவரே மும்பை மேயராக இருந்துள்ளார். அது தொடர வேண்டும் என்பதே ஷிண்டேவின் விருப்பமாக இருக்கிறது. கட்சிக்குள்ளேயே ஷிண்டே மீதான பிரஷர் அதிகரிக்கும் நிலையில், அடுத்த சில நாட்கள் அங்கு முக்கியமானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications