ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம்.. சர்ச்சையை கிளப்பிய சிவசேனா எம்எல்ஏ-வின் பின்னணி
மும்பை: காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு சன்மானமாக ரூ.11 லட்சம் வழங்குவேன் என்று மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏ பேசியுள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனா எம் எல் ஏவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சிவசேனா கூட்டணியில் பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆளும் சிவசேனா கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் சஞ்செய் கெய்க்வாட். இவரது பேச்சுத்தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சஞ்ச்செய் கெய்க்வாட், 'அமெரிக்கா சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்குள்ள இட ஒதுக்கீடு முறையை முடிக்க விரும்புவதாக கூறினார். ராகுலின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை காட்டியுள்ளது. இட ஒதுக்கீடு குறித்து பேசிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு சன்மானமாக ரூ.11 லட்சம் வழங்குவேன் என்றார்.
இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஞ்செய் கெய்க்வாட்டின் பேச்சுக்கு கடும் கண்டனங்களும் கிளம்பியுள்ளன. சிவசேனா எம் எல் ஏ சஞ்செய் கெய்க்வாட் கருத்தை ஏற்கவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன் குலே கூறுகையில், "சஞ்செய் கெய்க்வாட்டின் கருத்துக்களை நாங்கள் ஆதரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை.
வேற லெவலில் மாறுது.. சென்னை மெரினா நீச்சல் குளம்! மாநகராட்சியின் சூப்பர் முடிவு.. இனி பிரச்சினை இல்லை
அதேவேளையில் நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு, இட ஒதுக்கீடு முன்னேற்றத்தை பாதிக்கும் எனக் கூறி அதற்கு எதிராக இருந்ததை மறக்க முடியாது. அதேபோல இட ஒதுக்கீடு கொடுப்பது முட்டாள்களை ஆதரிப்பது போன்றது என்றார். தற்போது ராகுல் காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிப்பேன் என்கிறார். நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி பேசிய கருத்துக்களை ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்" என்றார்.
யார் இந்த சஞ்செய் கெய்க்வாட்?: மகாராஷ்டிரத்தின் புல்தானா தொகுதி எம்எல்ஏவான சஞ்செய் கெய்க்வாட் இப்படி சர்ச்சையாக பேசுவது புதிது கிடையாது. கடந்த மாதம் கூட இவரது காரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுவும் வீடியோ வைரல் ஆனது. இது தொடர்பாக விளக்கம் அளித்த சஞ்செய் கெய்க்வாட், போலீஸ் அதிகாரி வாந்தி எடுத்ததால் காரை கழுவுவதாக கூறினார்.
தாலி கட்டும் நேரத்தில்.. காதலன் செய்த காரியம்.. ஆடிப்போன பெண் வீட்டார்! திருத்தணியே ஆடிப்போச்சு
கடந்த 1987 ஆம் ஆண்டு புலியை வேட்டையாடி அதன் பல்லை எடுத்து தனது கழுத்தில் மாட்டியிருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது இந்த வீடியோவே அவருக்கு வினையாக மாறியது. வனத்துறையினர் அவரது கழுத்தில் கிடந்த பல்லை ஆய்வுக்கு அனுப்பி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் சஞ்செய் கெய்க்வாட், தற்போது ராகுல் காந்தி குறித்து கண்டிக்கதக்க வகையில் பேசியிருக்கிறார். சஞ்செய் கெய்க்வாட்டின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications