வேற லெவலில் மாறுது.. சென்னை மெரினா நீச்சல் குளம்! மாநகராட்சியின் சூப்பர் முடிவு.. இனி பிரச்சினை இல்லை
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சி சீரமைத்து வருகிறது. கடந்த 4 மாதங்களாக இந்த நீச்சல் குளம் மூடப்பட்டு கிடந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்தில் இந்த நீச்சல் குளம் திறக்கப்படும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்திக்கொள்ள முடியும். ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.
சென்னை மெரினா கடற்கரைதான் நகர மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இடமாக உள்ளது. சென்னையில் கான்கிரீட் கட்டிடத்திற்குள் அடைந்து கிடைக்கும் மக்கள் பெரும்பாலானோர் வார இறுதி நாட்களில் இளைப்பாற மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு கடலின் அழகை ரசித்துவிட்டு வருவது வழக்கம்.

மெரினா நீச்சல் குளம்: மெரினா கடற்கரையில் செயற்கை நீருற்றுகள், புல்வெளியுடன் கூடிய தரைகள் என இளைப்பாற மக்களை கவரும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. அதேபோல சென்னை மெரினா கடற்கரையில் நீச்சல் குளம் ஒன்றும் உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் காலையும் மாலையும் ஏராளமானோர் குளித்து விட்டு செல்வது வழக்கம். இந்த நீச்சல் குளத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தனியாரிடம் வழங்கப்பட்டு இருந்தது.
குளிக்க தடை: கட்டண அடிப்படையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நீச்சல் குளங்களை சரிவர பராமரிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்தது. இதற்கிடையே, தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து கடந்த 4 மாதங்களாக இந்த நீச்சல் குளம் மூடப்பட்டு கிடந்தது. இந்த நிலையில் தான், அண்மையில் மெரினா கடற்கரை பகுதிக்கு ஆய்வு சென்ற அமைச்சர் கே என் நேரு, நீச்சல் குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார். இதையடுத்து, சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஒரு வாரத்தில் திறக்கப்படும்: இந்த நிலையில் தான், சென்னை மெரினாவில் நீச்சல் குளம் ஒருவாரத்தில் திறக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமர குருபரன் கூறுகையில், "மெரினா நீச்சல் குளத்தில் சுத்தமான தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகள், நீச்சல் பயிற்சி வருவோருக்கான வசதிகள், டாய்லெட் வசதி, உடை மாற்றும் அறைகள் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுவர்களில் கண்கவர் ஓவியங்கள், சிசிடிவி கேமராக்கள், கூடுதல் லைட்கள் உள்ளிட்டவைகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்து ஒருவாரத்தில் மெரினா நீச்சல் குளம் திறக்கப்படும். மெரினா நீச்சல் குளத்தை இனி மாநகராட்சியே பராமரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் புக்கிங்: நீச்சல் குளத்திற்கு செல்ல விரும்புபவர்கள் ஆன்லைனிலேயே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்திக்கொள்ள முடியும். ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதி வந்தால் வார இறுதி நாட்களில் வரும் கூட்டத்தை சமாளிக்க எளிதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி: சென்னை மெரினா கடற்கரை அருகே இருந்த நீச்சல் குளம் கிட்டதட்ட 4 மாதமாக மூடிக்கிடந்த நிலையில், தற்போது புதுப்பொலிவுடன் திறக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் இந்த நீச்சல் குளங்களில் சிறுவர்களும் இளைஞர்களும் செல்வதை காண முடியும். கடந்த பல மாதங்களாகவே நீச்சல் குளம் திறக்கப்படாமல் இருந்ததால் ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு மாநகராட்சியின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications