ரூ.4 ஆயிரம் கோடி மோசடி.. 5 மாநிலங்களில் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர்களுக்கு சொந்தமான ரூ.503 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வங்கிக் கடன் மோசடி வழக்கில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஆந்திராவில் உள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொழிலதிபர்கள் மனோஜ் ஜெய்ஸ்வால், அபிஜித் ஜெய்ஸ்வால், அபிஷேக் ஜெய்ஸ்வால் ஆகியோரின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டன.

மும்பையை சேர்ந்த பிரபல நிறுவனம் கார்ப்பரேட் பவர் லிமிட்டெடு. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் இயக்குனர்களாக மும்பையை சேர்ந்த மனோஜ் ஜெய்ஸ்வால், அபிஜித் ஜெய்ஸ்வால் உள்ளனர்.

enforcement directorate fraud mumbai

இந்த நிறுவனம் தனது தொழிலை விரிவுபடுத்துவதாக கூறி பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் ரூ. 4 ஆயிரம் கோடி கடனாக பெற்று முறைகேடு செய்ததாக குறச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக யூனியன் வங்கி அளித்த புகாரில், பொய்யான ஆவணங்களை காட்டி கடன் பெற்றதோடு, அந்த நிதியை ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்து முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், வங்கிக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.11 ஆயிரம் கோடி நிதி செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிதி முறைகேட்டில் நடைபெற்ற சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ. 56 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ரூ. 223 கோடி மதிப்பிலான பங்குகள் மற்றும் மியூட்சுல பண்ட்ஸ் முதலீடுகள் ஆகியவற்றை முடக்கியது.

இந்த நிலையிதான், பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ரூ. 4 ஆயிரம் கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கற்பனையான போலி வங்கி கணக்குகளை உருவாக்கி கற்பனையாக பரிவர்த்தனைகளை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகவும், கார்ப்பரேட் பவர் லிமிடெடு நிறுவனத்தில் மட்டும் இன்றி அப்ஜித் குழுமங்களின் பிற நிறுவனங்களும் வங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+