கூட்டம் கூடுவதை தவிர்க்க அதிரடி: நாசிக் நகர மார்க்கெட்டுகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள மார்க்கெட்டுகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து நகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டம் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே கூறியுள்ளார்.

போட்டு தாக்கும் கொரோனா
இந்தியாவில் சில மாதங்கள் அடங்கி இருந்த கொரோனா மீண்டும் தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. தனமும் 50,000-க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டு அச்சுறுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் மட்டும் 80% பாதிப்புகள் உள்ளன. குறிப்பாக மகாராஷ்டிரா முழுவதும் கொரோனா ஆட்சி செய்து வருகிறது என்றே கூறலாம். மகாராஷ்டிராவின் மும்பை, புணே உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

மகாராஷ்டிராவில் அதிகம்
இதனால் அங்குள்ள பெரும்பாலான நகரங்களில் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாசிக் நகரிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.நாசிக்கில் உள்ள மார்க்கெட்டில் மக்கள் மாஸ்க் அணியாமல் பெருமளவில் கூட்டம், கூட்டமாக சென்று வந்ததால் தொற்று மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டது.

மார்க்கெட்டில் நுழைய கட்டணம்
இதனால் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில் நாசிக்கில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நாசிக் நகர நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கட்டணம் விதிக்கப்படுவதன் மூலம் மார்கெட்டுகளில் அதிக அளவு கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என்று நாசிக் நகர அதிகாரிகள் கூறினார்கள். இது தொடர்பாக நாசிக் போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே கூறியதாவது:- நாசிக்கில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாங்கள் வேறுபட்ட அணுகுமுறையைப் பயன்படுத்துகிறோம்.

கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்
ஒரு மார்க்கெட் பகுதிக்குள் நுழைய ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம். லாக்டவுனுக்கும் அவசியம் இருக்காது என்று கூறினார். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,918 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications