"மதச்சார்பின்மை.." அரசியலமைப்பில் இந்த வார்த்தை இருக்க வேண்டுமா? ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கேள்வி!
மும்பை: இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் இடம்பெற்றுள்ள "சோசலிஸ்ட்", "மதச்சார்பின்மை" ஆகிய இரண்டு வார்த்தைகள் எமர்ஜென்சி காலத்தில் சேர்க்கப்பட்டது என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார். அந்த வார்த்தைகள் அரசியலமைப்பில் தொடர்வது குறித்து விவாதம் நடத்தி முடிவு செய்யப்பட வேண்டும் என்று தத்தாத்ரேய ஹோசபலே கூறியிருக்கிறார்.
நமது நாட்டில் கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சி நிலையை அறிவித்தார். சுமார் 2 ஆண்டுகள் எமர்ஜென்சி நிலை நீடித்தது. அப்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.. மாநில அரசுகள் கலைக்கப்பட்டது.

சோசலிஸ்ட் & மதச்சார்பின்மை
இதற்கிடையே எமர்ஜென்சி காலத்தில் தான் அரசியலமைப்பின் முகவுரையில் இடம்பெற்றுள்ள "சோசலிஸ்ட்", "மதச்சார்பின்மை" வார்த்தைகள் சேர்க்கப்பட்டதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே கூறியுள்ளார். இதனால் அந்த வார்த்தைகள் தொடர வேண்டுமா என்பதை விவாதம் மூலமே முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஹோசபலே வலியுறுத்தியுள்ளார்.
எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்போது இருந்த அடக்குமுறைகளை விளக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தியது. அதன்படி நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஹோசபலே, "எமர்ஜென்சி காலகட்டத்தில் தான் அரசியலமைப்பில் சோசலிஸ்ட், மதச்சார்பின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. சுதந்திரத்தின் போது இயற்றப்பட்ட அசல் முகவுரையில் அந்த இரு வார்த்தைகளும் இல்லை.
விவாதம் தேவை
எமர்ஜென்சி காலத்தில் சேர்க்கப்பட்ட இந்த வார்த்தைகள் அதன் பிறகு நீக்கப்படவில்லை. அவை நீக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து விவாதம் நடக்க வேண்டும். இந்த இரண்டு வார்த்தைகளும் டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பில் இல்லை. எமர்ஜென்சியின்போது, நாட்டில் நாடாளுமன்றம் இல்லை, உரிமைகள் இல்லை, நீதித்துறை இல்லை. ஆனாலும் இந்த இரண்டு வார்த்தைகள் சேர்க்கப்பட்டன" என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஹோசபலே காங்கிரஸ் கட்சியையும், அதன் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். அவர் மேலும் பேசுகையில், "இதைச் செய்தவர்கள் (எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்கள்) இன்று எங்கு சென்றாலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளை வைத்துக்கொண்டு சுற்றுகிறார்கள்.. ஆனால், இன்று வரை அவர்கள் எமர்ஜென்சி கொண்டு வந்தது தப்புதான் என மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.
சுதந்திரம் இல்லாமல் போனது
எமர்ஜென்சி காலக்கட்டத்தில் நீங்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை சிறையில் அடைத்தீர்கள்.. 250க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்தீர்கள்.. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டது. நீதித்துறையின் சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள். இதைச் செய்தவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்டார்களா? நீங்கள் இதை (எமர்ஜென்சி) கொண்டு வரவில்லை என்றாலும்.. உங்கள் தலைவர்கள் செய்தது தவறு என சொல்லி நீங்களாவது மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ஆவேசமாக விமர்சித்தார்.
காங்கிரஸ் பதிலடி
மேலும், எமர்ஜென்சி தொடர்பாக பாஜக தலைவர்களும் காங்கிரஸை விமர்சித்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், "சுதந்திரப் போராட்டத்திலோ அல்லது அரசியலமைப்பு உருவாக்கத்திலோ பங்களிக்காதவர்கள் இப்போது அதை பாதுகாப்பதாக கூறுகிறார்கள்.. பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் நாடு கடந்து வந்த ஒரு காலத்தை நினைவுபடுத்துகிறார். மக்கள் ஏற்கனவே மறந்துவிட்ட ஒரு விஷயத்தை அவர் பிரச்சினையாக்குகிறார்" என்று அவர் கூறினார்.
-
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications