ரூ 15,000 கோடி சொத்துக்களை இழக்கும் நடிகர் சைஃப் அலிகான்! காரணமான இளவரசி யார் தெரியுமா? விவரம்
மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு மத்தியப் பிரதேசத்தில் மூதாதையர் சொத்துக்கள் உள்ளன, அவை விரைவில் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும். இந்த சொத்தின் மதிப்பு தோராயமாக ரூ.15,000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் ஏன் அரசு கையகப்படுத்த உள்ளது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கடந்த வாரம் நடந்த கத்திக்குத்து சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சைஃப் அலி கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சைஃப் அலிகானுடன் தொடர்புடைய செய்தி ஒன்றும் தற்போது பரவி வருகிறது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
சைஃப் அலி கான் போபாலை சேர்ந்த பட்டோடி அரச குடும்பத்தின் வாரிசான முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகானுக்கும், நடிகை ஷர்மிளா தாகூருக்கும் மகனாக பிறந்தவர். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார்.
பட்டோடி அரச குடும்பத்துக்கு சொந்தமாக போபாலில் அரண்மனை உள்பட ரூ.15 ஆயிரம் கோடிக்கு சொத்துகள் உள்ளன. போபாலின் கடைசி நவாப்பின் மூன்று மகள்களில் மூத்த மகள் அபிதா பிரிவினையின்போது பாகிஸ்தான் சென்று குடியேறினார்.
இரண்டாவது மகள் சஜிதா சுல்தான் இந்திய கிரிக்கெட் வீரர் இப்திகார் அலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் வழிப்பேரன்தான் நடிகர் சைஃப் அலிகான். பாகிஸ்தான் சென்றுவிட்ட அபிதாவின் அரச குடும்ப சொத்துகளை எதிரி சொத்துகளாக கருதி 2014-ல் மத்திய அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து சைஃப் அலிகான் 2015-ல் மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் போபால் அரச குடும்ப சொத்துகளில் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என்று சொல்லி கடந்த டிசம்பர் மாதம் மனுவை தள்ளுபடி செய்தது. 30 நாட்களுக்குள் சயீப் அலிகான் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்து இருந்தது.
ஆனால் சைஃப் அலிகான் மேல் முறையீடு செய்யவில்லை. இதையடுத்து சைஃப் அலிகானின் ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகளை அரசு கையகப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த சொத்துக்களில் குடியிருந்து வரும் பல லட்சக்கணக்கானவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
யார் இந்த அபிதா சுல்தான்:
போபாலின் நவாப் ஹமீதுல்லா கானின் மூத்த மகள் அபிதா சுல்தான். 1913 ஆம் ஆண்டு பிறந்த இவரது தங்கை வழி பேரன்தான் சைஃப் அலி கான். அபிதா சுல்தான், இந்தியவின் இரண்டாவது பெண் பைலட் என்ற பெருமையையும் கொண்டவர். முதல் இஸ்லாமிய பெண் பைலட்டும் இவரே ஆவார். இந்தியா சுதந்திரம் அடைந்த ஆறு மாதங்கள் கழித்து அபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு சென்றார். 1949 -ல் அபிதா பாகிஸ்தானுக்கு சென்றபோது இரண்டு சூட்கேசுகளுடன் சென்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications