2 வாரம் ஆச்சு.. இன்னும் தூங்க முடியாமல் தவிக்கும் சல்மான் கான்.. பாபா சித்திக் படுகொலையால் ஷாக்
மும்பை: மகாராஷ்டிர என்சிபி தலைவர் பாபா சித்திக் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். சல்மான் கானுக்கு உதவியதாலேயே அவர் கொல்லப்பட்டதாக பிஷ்னோய் கும்பல் தெரிவித்தது. இந்த படுகொலையால் சல்மான் கான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரவு தூங்க முடியாமல் சிரமப்படுவதாகவும் பாபா சித்திக் மகன் ஜீஷன் சித்திக் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு என்சிபி தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த படுகொலை நடந்து சுமார் 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், இன்னுமே அவரது மகன் ஜீஷன் சித்திக் உட்பட அவரது குடும்பத்தினரால் அந்தச் சம்பவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. இந்த படுகொலையால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான்.
நட்பு: பாபா சித்திக் மற்றும் சல்மான் கான் இடையே நெருங்கிய நட்பு இருந்தது. பல நேரங்களில் சல்மான் கானுக்கு பாபா சித்திக் உதவி இருக்கிறார். அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டது சல்மான் கானை மன ரீதியாகக் கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாகப் பிரபல கேங்ஸ்டார் லாரன்ஸ் பிஷ்னோய் கேங் இந்த கொலைக்குப் பொறுப்பேற்றுள்ளது.. மேலும், சல்மான் கான் உடனான தொடர்பு காரணமாகவே பாபா சித்திக்கை கொன்றதாகவும் சல்மானுக்கு உதவும் அனைவருக்கும் இதே கதி தான் என்றும் எச்சரித்தது. இது சல்மான் கானுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாபா சித்திக் மகன்: இதற்கிடையே பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் தனது தந்தையின் கொலை சல்மானை எந்தளவுக்கு ஆழமாகப் பாதித்துள்ளது என்பது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாகப் பிரபல இந்தி ஊடகத்திடம் பேசிய அவர், "இந்த சம்பவத்தால் சல்மான் கான் மிகுந்த சோகத்தில் இருக்கிறார். எனது தந்தையும் சல்மான் கானும் சகோதரர்களைப் போல நெருக்கமாக இருந்தனர்.
தூங்க முடியாமல் சல்மான் அவதி: அப்பாவின் மறைவுக்குப் பிறகு, சல்மான் தன்னால் முடிந்த ஆதரவை எங்களுக்கு அளித்தார். எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பதை எப்போதும் உறுதி செய்து கொள்வார். மேலும், தன்னால் இரவு நேரங்களில் தூங்க முடிவதில்லை என்றும் சொல்வார். சல்மான் கான் எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். வரும் காலங்களிலும் அது தொடரும் என்றும் எங்களுக்குத் தெரியும்" என்றார்.
என்ன காரணம்: சல்மான் கான் கடந்த 1998ல் பாலிவுட் படம் ஒன்றின் ஷூட்டிற்காக ராஜஸ்தான் சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு வகை கலைமானை (blackbucks) வேட்டையாடியதாகப் புகார் எழுந்தன. இதற்காக சல்மான் கான் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த கலைமானை பிஷ்னோய் சமூகத்தினர் தெய்வமாக வழிபடுவார்கள். எனவே, தங்கள் குல தெய்வ கோயிலுக்கு நேரில் வந்து சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் கேங் மிரட்டியுள்ளது. இல்லை என்றால் சல்மான் கானுக்கும் இதே கதி தான் என்று மிரட்டல் விடுத்து வருகிறது.
முன்னதாக சல்மான் கானை குறிவைத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டையும் இந்த கேங் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர அரசு அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை ஒய்-பிளஸ் அந்தஸ்துக்கு உயர்த்தியது. ஒய்- பிளஸ் பிரிவின் கீழ் 2 முதல் 4 கமாண்டோக்கள் மற்றும் போலீசார் உட்பட 11 பேர் 24 * 7 பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications