மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காந்தி படுகொலை.. பின்னணியில் சாவர்க்கர்! கோட்சேவிடம் துப்பாக்கி வந்தது எப்படி? மகாத்மா பேரன் பகீர்

Google Oneindia Tamil News

மும்பை: மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு சக்திவாய்ந்த துப்பாக்கியை கொடுத்ததே சாவர்க்கர்தான் என்று அவரது பேரன் துஷார் காந்தி பரபரப்பு தகவலை தெரிவித்து இருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த சாவர்க்கர் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரால் தலைவராக போற்றப்பட்டு வரும் சாவர்க்கரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேச துரோகி என விமர்சித்து வருகின்றனர்.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் வெள்ளையருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் என பல ஆண்டுகளாக வரலாற்று ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மங்களூரு சம்பவம்: வீட்டிலேயே வெடி குண்டு தயாரித்த ஷரீக்.. போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள் மங்களூரு சம்பவம்: வீட்டிலேயே வெடி குண்டு தயாரித்த ஷரீக்.. போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இதேபோல், சாவர்க்கரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். "சாவர்க்கர் ஜி, தான் எழுதிய புத்தகத்தில், எனது நண்பர்களுடன் சேர்ந்து சென்று முஸ்லிம்கர்களை தாக்கும் தினமே எனக்கு மகிழ்ச்சியான நாள். என்று குறிப்பிட்டு உள்ளார். எனவே அவருக்கு மரியாதை தரும் விதமாக சாவர்க்கர் ஜி என்று நான் அழைக்க மாட்டேன்." என ராகுல் காந்தி தெரிவித்தார்.

சாவர்க்கரின் ஓய்வூதியம்

சாவர்க்கரின் ஓய்வூதியம்

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, கடந்த வாரம் செவ்வாய்கிழமை பழங்குடியின தலைவர் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "அந்தமான் சிறையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார்.

மன்றாடிய சாவர்க்கர்

மன்றாடிய சாவர்க்கர்

தன்னை விடுதலை செய்யுமாறு அவர் மன்றாடினார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஓய்வூதியம் வாங்கினார். விடுதலைக்கு பின் பிரிட்டிஷ் படைகளில் சாவர்க்கர் சேர்ந்தார். பிர்ஸா முண்டாவுக்கும் சாவர்க்கருக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. 24 வயதில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் பிர்ஸா முண்டா. பாஜக இன்றும் அவரது கொள்கைகளை எதிர்த்து வருகிறது." என்றார்.

சாவர்க்கர் பேரன்

சாவர்க்கர் பேரன்

ராகுல் பேச்சை தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர், "2017 ஆம் ஆண்டு முதல் என் தாத்தாவை ராகுல் காந்தி அவமதித்து வருகிறார். ராகுல் காந்தி திட்டமிட்டு சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை அவம்ரியாதை செய்கிறார். நான் அவர் மீது போலீசில் புகாரளிக்க உள்ளேன். வாக்கு வங்கி அரசியலுக்காக சாவர்க்கரை காங்கிரஸ் அவமதித்து வருகிறது." என்றார்.

மன்னிப்பு கடிதம்

மன்னிப்பு கடிதம்

சாவர்க்கர் பேரன் பேட்டியை சுட்டிகாட்டி பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி சாவர்க்கர் அந்தமான் சிறையில் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தையே வெளிப்படையாக காட்டினார்.

காந்தி பேரன்

காந்தி பேரன்

இதுகுறித்து மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதில், "சாவர்க்கர் பிரிட்டிஷாருக்கு மட்டும் உதவி செய்யவில்லை. அவர் காந்தியை கொலை செய்வதற்காக நாதுராம் கோட்சேவுக்கும் சக்திவாய்ந்த துப்பாக்கியை வழங்கி உதவினார். காந்தி கொலைக்கு 2 நாட்கள் முன்புவரை கோட்சேவிடம் அதுபோன்ற துப்பாக்கி இல்லை." என்று பதிவிட்டு உள்ளார்.

English summary
Mahatma Gandhi Grandson tweeted that, "Savarkar not only helped the British, he also helped Nathuram Godse find an efficient gun to murder Bapu. Till two days before Bapu’s Murder, Godse did not have a reliable weapon to carry out the murder of M. K. Gandhi."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X