மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசியா?.. அப்ப மற்ற மாநிலங்களெல்லாம் பாகிஸ்தானா.. சிவசேனா கேள்வி

Google Oneindia Tamil News

மும்பை: பீகார் மாநில மக்களுக்கு மட்டும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள நிலையில் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தான் இல்லை என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 28 தேதியில் முதல் கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் ஜேடியு- பாஜக ஒரு அணியாகவும், காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதா தளம் மறு அணியாகவும் தேர்தலை களம் காண்கின்றனர்.

வருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு! வருமான வரி தாக்கல் செய்ய மேலும் கால நீட்டிப்பு!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

இந்த நிலையில் பீகார் தேர்தலையொட்டி பாஜக கூட்டணி நேற்று முன் தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பீகார் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிவசேனா

சிவசேனா

இதுகுறித்து பாஜகவை சிவசேனா விமர்சித்து சாம்னா பத்திரிகையில் தலையங்கம் வெளியிட்டிருந்தது. அதில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது. பீகார் மாநிலத்திற்கு மட்டும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளது.

நாட்டு மக்கள்

நாட்டு மக்கள்

அவ்வாறெனில் மற்ற மாநிலங்கள் எல்லாம் என்ன பாகிஸ்தானா? கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி ஒரு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது ஒரு வாக்குறுதி அளித்தார்.

மாநிலங்கள்

மாநிலங்கள்

அதாவது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றை சரி சமமாக மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மாநிலங்கள், மதம், ஜாதி அடிப்படையில் வழங்க மாட்டோம் என்றார். ஆனால் இன்று தேர்தலுக்காக தனது வாக்குறுதியை மீறி பீகாருக்கு மட்டும் அள்ளி வீசியது. பாஜகவை யார் அறிவுறுத்தி வருகிறது? என சாம்னாவில் கேள்வி எழுப்பப்பட்டது.

English summary
Shiv Sena attacks BJP over free Covid-19 vaccine promise in Bihar, says 'other states aren't Pakistan'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X