மகாராஷ்டிரா: ஷிண்டே முதல்வர் பதவி தப்புமா? தகுதி நீக்க விவகாரம்- நாளை தீர்ப்பு அளிக்கும் சபாநாயகர்!
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட சிவசேனாவின் 53 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் நாளை தீர்ப்பு அளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து உத்தவ் தாக்கரேவை முதல்வராக கொண்ட கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகள் தொடர்ந்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சி 2 ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவின் 40க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கை கோர்த்தனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்தது.

சிவசேனா யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சாதகமான முடிவை தந்தது தேர்தல் ஆணையம். அதற்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரியது உத்தவ் தாக்கரே அணி. அதேபோல உத்தவ் தாக்கரே அணியின் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஷிண்டே தரப்பும் கோரிக்கை விடுத்தது. மொத்தம் 53 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கி இருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் சபாநாயகருக்கு கடுமையாக பல முறை எச்சரிக்கை விடுத்து இறுதி முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் கெடு நாளை புதன்கிழமையுடன் முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே உட்பட 53 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பை நாளை அறிவிக்கிறார் சபாநாயகர் ராகுல் நார்வேகர். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? உத்தவ் தாக்கரே அணி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? அப்படி ஏக்நாத் ஷிண்டே தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அஜித் பவார், முதல்வராவாரா? அல்லது ஷிண்டே எம்.எல்.சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகவே நீடிப்பாரா? என்கிற பரபர திருப்பங்களை எதிர்நோக்கி இருக்கிறது மகாராஷ்டிரா மாநில அரசியல்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications