சிவசேனா கட்சி சின்னம் முடக்கம்: உதயசூரியன், திரிசூலம்.. புதிய சின்னம் பெற உத்தவ் டீம் மும்முரம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிவசேனாவின் இரு அணிகளுக்கும் வழங்காமல் வில் அம்பு சின்னத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்த நிலையில், உத்தவ் தாக்கரே அணியினர் திரிசூலம் மற்றும் உதய சூரியன் ஆகிய சின்னத்தை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மகராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி வாகை சூடின.

ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் , தேசிய வாத கங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.

பாஜகவுடன் கூட்டணி

பாஜகவுடன் கூட்டணி

இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆபரேஷன் தாமரை மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும் ஆனால் ஒருநாளும் நடக்காது எனவும் உத்தவ் தாக்கரே கூறி வந்தார். ஆனால் திடீர் திருப்பமாக உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கமாக அறியப்படும் ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜுன் மாதம் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். சிவசேனாவில் உள்ள 55 எம்.எல்.ஏக்களில் 40 பேருடன் தனி அணியாக சென்ற ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார்.

கட்சியை கைப்பற்ற போட்டி

கட்சியை கைப்பற்ற போட்டி

அதேபோல், சிவசேனாவின் 12 எம்.பிக்களில் 12 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவினர். இதனால் சிவசேனா கட்சி இரு அணிகளாக உடைந்தது. இதையடுத்து, கட்சியை கைப்பற்ற இரு அணிகளும் மும்முரம் காட்டின. முதல் ஆளாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய ஏக்நாத் ஷிண்டே தங்கள் அணிக்குதான் சிவசேனா கட்சியின் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று முறையீட்டார். ஆனால், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அதுவரை இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

 அந்தேரி கிழக்கு தொகுதி

அந்தேரி கிழக்கு தொகுதி

ஆனால், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதற்கு மத்தியில் அந்தேரி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 4 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே தரப்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், தங்கள் அணிக்கே கட்சியின் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம் உத்தவ் தாக்கரே தரப்பை பதில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.

 கட்சி, சின்னம் முடக்கம்

கட்சி, சின்னம் முடக்கம்

இதையடுத்து, நேற்று பதில் மனு தாக்கல் செய்த உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே கட்சியில் இருந்து அவராகவே விலகிக் கொண்டார். பிறகு எப்படி உரிமை கோர முடியும் என்று தெரிவித்தார். இரு தரப்பு மனுக்களையும் பரிசீலித்த தேர்தல் ஆனையம் சிவசேனா கட்சியின் சின்னத்தையும் பெயரையும் முடக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

அடுத்து என்ன செய்யலாம்

அடுத்து என்ன செய்யலாம்

ஏனெனில், அந்தேரி கிழக்கு தொகுதியில் பாஜகதான் போட்டியிடுகிறது. ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவு மட்டுமே அளித்துள்ளது. ஆனால், இந்த தொகுதியில் பாஜகவை எதிர்த்து களம் இறங்கும் உத்தவ் தாக்கரே அணிக்கு வில் அம்பு சின்னம் கிடைக்காமல் போனது பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், வரும் இடைத்தேர்தலில் எந்த சின்னத்தை பயன்படுத்தலாம் என்று உத்தவ் தாக்கரே தரப்பு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

 திரிசூலம், உதிக்கும் சூரியன்

திரிசூலம், உதிக்கும் சூரியன்

முதல் விருப்பமாக சிவசேனா பாலாசகேப் தாக்கரே என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் உத்தவ் தாக்கரே அணி அளித்துள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. 2-வது விருப்பமாக உத்தவ் பாலசாகேப் தாக்கரே என்ற பெயரையும் அளித்துள்ளதாம். அதேபோல் சின்னத்தை பொருத்தவரை திரிசூலம் சின்னத்தை முதல் விருப்பமாகவும் உதய சூரியன் சின்னத்தை 2-வது விருப்பமாகவும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வில் அம்பு சின்னம்

வில் அம்பு சின்னம்

சிவசேனா கட்சிக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு வில் அம்பு சின்னம் ஒதுக்கப்பட்ட்டது. இந்த சின்னம் கிடைக்கும் முன்பாக வாள், கேடையம், தென்னை மரம், ரயில் என்ஜின் மற்றும் கப் மற்றும் பிளேட் ஆகிய சின்னங்களில் அக்கட்சி போட்டியிட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+