நிஜ இந்துத்துவா யார்? பலத்தை காட்ட அயோத்தி சென்ற ஆதித்யா தாக்கரே.. ரயிலில் 8,000 சிவசேனா தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா அமைச்சரும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திக்கு செல்கிறார்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் மாலை 5:30 மணியளவில் பூஜை செய்யும் அவர் தலைநகர் லக்னோ புறப்பட்டு அங்கிருந்து மும்பை திரும்புகிறார்.

அயோத்தி பயணத்தின்போது சரயு ஆரதி பூஜை செய்யும் ஆதித்யா தாக்கரே, அங்குள்ள அனுமன் கர்ஹி கோயில் மற்றும் லட்சுமணன் கில்லாவுக்கு செல்கிறார்.

 தனி பயணம்

தனி பயணம்

சிவசேனா கட்சியின் எதிர்கால தலைவராக அறியப்படும் 32 வயதான ஆதித்யா தாக்கரே தனியாக அயோத்திக்கு செல்வது இதுவே முதல்முறை. இதற்கு முன்னதாக தனது தந்தை உத்தவ் தாக்கரேவுடன் அவர் அயோத்திக்கு சென்றிருக்கிறார். அயோத்தியில் தனக்கு இருக்கும் பலத்தை காட்டுவதற்காகவே உத்தவ் தாக்கரே இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

8,000 தொண்டர்கள்

8,000 தொண்டர்கள்

ஆதித்யா தாக்கரேவின் அயோத்தி பயணத்தை ஒட்டி 8,000 சிவசேனா தொண்டர்கள் மும்பை மற்றும் தானேவிலிருந்து தனி ரயிலில் அயோத்திக்கு சென்றுள்ளனர். மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிப்பதற்காக எதிர்கொள்கை கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைத்து செயல்படுவதாக பாஜக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழலில் ஆதித்யா தாக்கரேவின் இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

மூத்த தலைவர்கள்

மூத்த தலைவர்கள்

சிவசேனா மூத்த தலைவர்கள் சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலர் நேற்றே அயோத்தியில் முகாமிட்டுள்ளனர். பாஜகவின் இந்துத்துவ கொள்கை போலியானது என விமர்சித்து வரும் சிவசேனா கட்சி, தாங்கள் இன்னும் இந்துத்துவ கொள்கையில் நிலைத்து இருப்பதை காட்டுவதற்காகவே ஆதித்யா தாக்கரே அயோத்தி சென்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

ராஜ் தாக்கரே

ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் பாங்கு, அனுமன் சலிசா பிரச்சனைகளை கிளப்பி வந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அயோத்திக்கு செல்வதாக அறிவித்து இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக அவரது அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட சிவசேனா, ஆதித்யா தாக்கரேவை அயோத்திக்கு அனுப்பி இருக்கிறது.

 யார் உண்மையான இந்துத்துவா?

யார் உண்மையான இந்துத்துவா?

ராஜ் தாக்கரே மகாராஷ்டிராவில் வசிக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைப்பதாக குற்றம்சாட்டிய பாஜக எம்பி ரிபூஷன் சிங், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். அதே நேரம் அவர் ஆதித்யா தாக்கரே அயோத்தி வருகைதர வேண்டும் என அழைப்பு விடுத்து இடுந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிராவில் இந்துத்துவ கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டு அயோத்திக்கு பயணம் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+