விடிகாலை வந்த அலறல்.. டிரைவரின் சில்மிஷம்.. ரோட்டில் தரதரவென இழுத்து.. சட்டையை பிடித்த பெண்.. வீடியோ
கல்லூரி மாணவிக்கு பாலியல் டார்ச்சர் தந்த ஆட்டோ டிரைவர் கைதானார்
மும்பை: அதிகாலை நேரத்தில், நடுரோட்டிலேயே இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் ஒரு ஆட்டோக்காரர்.. அந்த பெண்ணை ஆட்டோவில் கட்டி இழுத்தும் சென்றுள்ளார்.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது..
இதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதை மறுக்க முடியாது... இதற்கு அடுத்தபடியாக உள்ளது மத்திய பிரதேசம்.. இப்படி வடமாநில பெண்களின் நிலைமை நாளுக்குநாள் பரிதாபத்தை கூட்டிவருகிறது..

பெரிய டவுட்
கணவன்மார்களிடம் சிக்கி சீரழியும் அந்த பெண்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.. அத்துடன், இளம்பெண்களும் தங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்பதும் அதிகரித்து கொண்டே செல்கிறது.. இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. தானே ரெயில்வே ஸ்டேஷன் அருகில், நேற்று காலை 6.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.. 21 வயது ஒரு கல்லூரி மாணவி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். காலை நேரம் என்பதால், மக்கள் நடமாட்டம் எப்போதுமே அதிகம் இருக்கும் என்றாலும், நேற்றைய தினம், நடமாட்டம் அவ்வளவாக நடமாடவில்லை.

டென்ஷன்
அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், மாணவியை திடீரென மானபங்கம் செய்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி காப்பாற்றுங்கள் என்று அலறி சத்தம் போட்டு உதவி கேட்டார்.. அப்போதுதான், அருகில் யாருமே இல்லை என்று மாணவிக்கும் தெரியவந்துள்ளது.. இருந்தாலும் தொடர்ந்து கத்தி கூச்சலிட்டார்... இதனால் டிரைவர் டென்ஷன் ஆகிவிட்டார்.. உடனே அங்கிருந்து தப்பித்து செல்ல ஓடினார்.. ஆனால், மாணவி விடவில்லை.. அந்த டிரைவரின் சட்டை காலரை, கெட்டியாக பிடித்து கொண்டார்.

ஷர்ட் + காலர்
இதை பார்த்ததும் டிரைவருக்கு இன்னும் ஆத்திரம் அதிகமாகிவிட்டது.. அதனால், உச்சக்கட்ட கோபம் அடைந்த டிரைவர், அந்த மாணவியை தர, தரவென இழுத்து கொண்டு ஆட்டோவுக்கு சென்றார்... அப்போதும் மாணவி, டிரைவரின் சட்டை காலரை விடவேயில்லை.. அதேபோல டிரைவரும் அந்த பெண்ணை விடவில்லை.. இழுத்துக் கொண்டே ஓடினார்.. நேரம் ஆக ஆக பதறிப்போன டிரைவர், ஆட்டோவை ஸ்டார்ட் செய்துகொண்டே, மாணவியை தரையில் இழுத்து கொண்டே சிறிது தூரம் ஆட்டோவை ஓட்டினார். ஒரு கட்டத்தில் அவர் மாணவியை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவை வேகமாக கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டார்..

அப்பட்டமான காட்சி
அதற்கு பிறகுதான் அந்த பகுதியில் உள்ளவர்கள் சம்பவம் அறிந்து விரைந்து வந்தனர்.. ஓடிச்சென்று மாணவிக்கும் உதவினர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை நேற்றில் இருந்து தேடி வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்தனர்.. இதனிடையே, ஆட்டோ டிரைவர் கல்லூரி மாணவியை மானபங்கம் செய்து, ஆட்டோவில் இழுத்து சென்ற சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. இந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் கொந்தளித்துள்ளதுடன், அந்த ஆட்டோ டிரைவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நடுசாலை
அந்த வீடியோவில், மாணவியை தரையில் இழுத்து செல்வது பதிவாகி உள்ளது.. முக்கிய சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. காலை நேரம் என்பதால் கடைகள் எதுவும் திறக்கப்படாமல், மூடியவாறே உள்ளது.. ஒன்றிரண்டு வாகனங்கள் சாலையில் சென்றாலும், மாணவியின் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை.. நடுசாலையில், மாணவியை இழுத்து செல்லவும்தான், வாகன ஓட்டிகளுக்கு விஷயம் தெரிந்து ஓடிவருவது வீடியோவில் பதிவாகி உள்ளது. கிட்டத்தட்ட 20 மீட்டர் தூரத்துக்கு மாணவியை இழுத்துசெல்கிறார் அந்த டிரைவர்...!!












Click it and Unblock the Notifications