நிதின் கட்கரியுடன், சோனியா காந்தியின் 'வலது கரம்' அகமது பட்டேல் திடீர் சந்திப்பு.. பெரும் பரபரப்பு
மும்பை: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, நெருக்கமானவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான, அகமது பட்டேல், திடீரென, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக நடுவே கூட்டணி அரசு அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. மற்றொரு பக்கம் சிவசேனா கட்சியோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இது போன்ற பரபரப்பான சூழ்நிலைகளுக்கு நடுவே, நிதின் கட்கரியை, அகமது பட்டேல் சந்தித்து பேசியுள்ளார். இவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

மறுப்பு
இருப்பினும் மகாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் இழுபறி தொடர்பாக நிதின் கட்கரியுடன், ஆலோசனை நடத்தவில்லை, விவசாயிகள் பிரச்சினை பற்றிதான் பேசினேன், என்று அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.

காலகட்டம்
ஆனால் அகமது பட்டேல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் சந்தித்துள்ள இந்த காலகட்டம் என்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜகவில் அனைத்து கட்சிகளுடனும் நன்மதிப்பு பெற்றிருந்த ஒரு தலைவர் அருண் ஜேட்லி. அவரைப் போன்று நன்மதிப்பைப் பெற்றவர் நிதின் கட்கரி.

அருண் ஜேட்லிக்கு அடுத்து
அருண் ஜெட்லி மறைந்து விட்டதால் அவருக்கு பதிலாக நிதின் கட்கரியை ட்ரபிள் ஷூட்டர் அதாவது பேச்சுவார்த்தை நடத்தும் முக்கிய நபராக, பாஜக மேலிடம் கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ்
ஆட்சி அமைக்க, நிலவும் இழுபறி பற்றி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் நேற்று மகாராஷ்டிர மாநில காபந்து முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசு அமைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து விளக்கியுள்ளார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதால் கூடிய வரையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் படி மோகன் பகவத், பட்னாவிசிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்தான் கட்கரியை, அகமது பட்டேல் சந்தித்துள்ளார்.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications