மும்பையில் கன ஜோராய் தொடங்கிய பருவமழை..கொட்டித்தீர்த்தது - வெள்ளத்தில் நீந்தும் வாகனங்கள்
மும்பையில் தென்மேற்குப் பருவமழை கனஜோராக தொடங்கியுள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மும்பை: மராட்டிய மாநில தலைநகரத்தின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பருவமழை தொடங்கியுள்ளதன் அறிகுறியாக ஆரம்ப நாளிலேயே மழை வெளுத்து வாங்கியுள்ளது.
இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலமாகும். கடந்த மே மாத இறுதியில் அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. கேரளாவில் ஜூன் 3ஆம் தேதி தொடங்கிய பருவமழை பல பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்திலும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்க உள்ளதால் 48 மணி நேரத்துக்கு மராட்டியத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மும்பை மற்றும் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் சனிக்கிழமை வரை மழை கொட்டித்தீர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
|
மழை வெள்ளத்தில் மிதக்கும் மும்பை
வானிலை ஆய்வுமையம் கணித்தது போல மும்பையில் நேற்று முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல வாகனங்கள் வெள்ள நீரில் நீந்திச் செல்கின்றன.

வங்கக்கடலில் காற்றழுத்தம்
இதனிடைய வங்கக் கடலில் வரும் 11ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் அதே நேரம் இன்னொரு பக்கம் அரபிக் கடலில் தென்மேற்கு காற்று வேகமாக வீசும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை
மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் ஜூன் 11ல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத்தில் ஜூன் 11-13ஆம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழையை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் இந்தியாவின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

கனமழை கொட்டித்தீர்க்கும்
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை தொடங்கி கொல்கத்தா வரை பல்வேறு முக்கிய நகரங்களால் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும். திசா, மேற்கு வங்கத்தில் அதி தீவிர கனமழை ஜூன் 10, 11 தேதிகளில் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications