சுஷாந்த் கடைசியாக செய்த 2 போன் கால்.. தற்கொலைக்கு முன் பாலிவுட் நடிகரிடம் நீண்ட நேரம் பேச்சு.. யார்?
நடிகர் சுஷாந்த் சிங் தனது தற்கொலைக்கு முன் பாலிவுட் நடிகர் ஒருவரிடம் நீண்ட நேரம் போனில் பேசி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தனது தற்கொலைக்கு முன் பாலிவுட் நடிகர் ஒருவரிடம் நீண்ட நேரம் போனில் பேசி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக வலம் வருவார் என்று கணிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது மும்பை வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த் தற்கொலை
இந்த நிலையில் சுஷாந்த் சிங் தான் தற்கொலை செய்வதற்கு முன் இரண்டு பேரிடம் போனில் பேசி இருக்கிறார். காலை 10 மணிக்கு பின்தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 10 - 12 மணிக்குள் அவர் தற்கொலை செய்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவரின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

போன் கால்
இந்த நிலையில் அவர் 10 மணிக்கு பிறகு தனது சகோதரியுடன் போனில் பேசி இருக்கிறார். இவர் சுமார் 20 நிமிடம் தனது சகோதரியுடன் போனில் பேசி உள்ளார் . அதன்பின் பாலிவுட் நடிகர் ஒருவரிடம் போனில் பேசி இருக்கிறார். இவரின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. டீவி சீரியல்கள் மற்றும் சில பாலிவுட் படங்களில் நடித்த மகேஷ் ஷெட்டிதான் அந்த நபர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

யார் இவர்?
மகேஷ் ஷெட்டி சுஷாந்த் சிங்கின் மிகவும் நெருக்கமான நண்பர் ஆவார். இவர்கள் நீண்ட வருடங்களாக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சுஷாந்த் சிங் மகேஷை தனது உடன் பிறவாத சகோதரர் போல நடத்தி இருக்கிறார். டிவி நிகழ்ச்சியில் இருந்த போதே இவர்கள் இருவரும் நண்பர்கள். சுஷாந்த் சிங்கின் முதல் டிவி நிகழ்ச்சியான கிஸ் தேஷ் மெயின் ஹோகா மேரே தில் நிகழ்ச்சியில் மகேஷும் இருந்துள்ளார்.

காரணம்
சுஷாந்த் சிங்கிற்கு சினிமா வாய்ப்பு கிடைக்க முக்கியமான காரணங்களில் மகேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் உடன் பல இடங்களுக்கு சுஷாந்த் சிங் வெளியே சென்று இருக்கிறார். இவர்கள் இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் என்பது பாலிவுட் வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். கடந்த மே மாதம் கூட மகேஷ் பிறந்த நாளுக்கு சுஷாந்த் சிங் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

நீண்ட நேரம் பேசினார்
இந்த நிலையில் இவர்கள் இருவரும் நீண்ட நேரம் நேற்று போனில் பேசி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர். மகேஷை இன்று சந்தித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள். இது தொடர்பாக முக்கிய விஷயங்கள் வெளியே வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications