தங்கதுரை எல்லாம் ஓரளவுக்கு தான்..ரூ.45 லட்சம் சம்பளம் எப்படி பத்துமாம்! சீரியஸாக புலம்பிய ஐடி ஊழியர்
மும்பை: 3 ஆண்டுகள் ஐடி துறையில் அனுபவம் கொண்ட ஒருவருக்கு ஆண்டுக்கு 45 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளதாம். ஆனால், இந்த சம்பளம் குறைவு எனப் புலம்பும் அவர், இப்போது என்ன செய்வதென்றே புரியவில்லை.. இவ்வளவு குறைவாகச் சம்பளம் கிடைப்பதை ஏற்க முடியவில்லை என ட்வீட் செய்துள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை வேகமாக மாறி வருகிறது. நமது நாட்டில் இப்போது அதிக சம்பளத்தை வழங்கும் துறையாக ஐடி துறை இருக்கிறது. ஆனால், அங்கு வழங்கப்படும் சம்பளமே கூட போதவில்லை என பலரும் சொல்வதை நாம் பார்த்திருப்போம்.

ஐடி ஊழியர்
அப்படி தான் வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் உள்ள ஐடி ஊழியர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் இணையத்தில் விவாதத்தைக் கிளப்புவதாக இருக்கிறது.
அதாவது 3 ஆண்டு அனுபவத்திற்கு பிறகும் தனக்கு ஆண்டுக்கு 45 லட்சம் ரூபாய் சம்பளத்தில் மட்டுமே வேலை கிடைத்துள்ளதாகவும் இது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால் என்ன செய்யலாம் என்று சமூக வலைத்தளங்களில் அவர் ஆலோசனை கேட்கவே அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.
ரூ.45 லட்சம் தான் சம்பளம்
மெம்பர் ஆஃப் டெக்னிக்கல் ஸ்டாப் என்ற பணிக்கு அவர் தேர்வாகி இருக்கிறாராம். அதில் ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளம் மற்றும் 3 லட்சம் ரூபாய் போனஸ் கிடைக்குமாம். இதுபோக 52,000 டாலர் மதிப்புள்ள பங்குகளும் 4 ஆண்டுகளில் படிப்படியாகக் கிடைக்க ஆரம்பிக்குமாம். இது பார்க்க நல்ல ஒரு வேலை மாதிரியே தெரிகிறது.
ஆனால், இந்த வேலை தான் ஏமாற்றம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தனது தற்போதைய சம்பளத்திற்கு இணையானது.. அல்லது சில வழிகளில் பார்த்தால் குறைவாகக் கூட இருக்கும் என அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருந்து தனக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் வருவதாகப் பதிவிட்டுள்ள அவர், ஆனாலும் அதில் சேர ஆர்வம் இல்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
ஏமாற்றம்
அந்த நபர் மேலும், "இந்த வேலைவாய்ப்பு ஆஃபரை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? பொதுவாக எவ்வளவு சம்பளம் கிடைக்கும்? எனது நண்பர்கள் 6-8 மாதங்களுக்கு முன்பே 50+ பெற்றனர்.. ஆனால் இப்போது அவர்களால் இதுவே பெஸ்ட் என்று கூறுகிறார்கள்.. நான் என்ன செய்வதென்று புரியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள்
ட்விட்டர் தளத்தில் அவரது போஸ்ட் பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது. மூன்று வருட அனுபவம் உள்ள ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை வழங்குவதே அதிகம் என்று பலர் ஆச்சரியப்பட்டனர். அதேநேரம் இன்னும் சிலர் இது ஏமாற்றம் அளிப்பதாகவும், மார்க்கெட் முன்பு இருந்ததை விட இப்போது குறைவாக வழங்குவதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
அவரது இந்த பதிவு தொழில்நுட்பத் துறை வேகமாக மாறி வருவதையே காட்டுகிறது. தற்போதைய சந்தையில் எல்லா வேலைகளுக்கும் முன்பு கிடைத்த சம்பளத்தை விட இப்போது சம்பளம் குறைந்தே வருவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். சரி நீங்க சொல்லுங்க 3 ஆண்டு அனுபவம் கொண்ட இவருக்கு இந்த சம்பளம் குறைவா.. இல்லை அதிகமா?
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications