விமானத்தில் போதையில் தொல்லை கொடுத்த நபர்கள்.. நான் பொது சொத்தா என பிரபல நடிகை ஆவேசம்
மும்பை: மும்பையில் இருந்து கோவாவுக்கு விமானத்தில் சென்றபோது தனக்கு விமானத்தில் இருந்த சிலர் போதையில் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகை உர்ஃபி ஜாவீத் தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை என்றால் பொது சொத்தா? என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர் உர்ஃபி ஜாவித்.. ஓடிடி தளங்களில் வெளியாகும் சில சீரியல்களில் நடித்துள்ள உர்ஃபி ஜாவீத் தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டிஷோவிலும் கலந்து கொண்டு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அது மட்டுமின்றி அவ்வப்போது பிகினி உடைகளிலும் வித்தியாசமான ஆடைகளை அணிந்தபடியும் தனது இன்ஸ்டாவில் போட்டோ போட்டு நெட்டிசன்களை கிறங்கடித்து இணையத்திலும் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருக்கிறார்.

சமீபத்தில் கூட தக்காளியை காதணியாக அணிந்து கொண்டு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அதில் தக்காளிதான் புதிய தங்கம் என்ற கேப்ஷனையும் பதிவிட்டு உர்ஃபி ஜாவீத் வெளியிட்ட புகைப்படங்கள் பட்டிதொட்டியெல்லாம் வைரலாகின. இந்த நிலையில், தான் விடுமுறையை கொண்டாடுவதற்காக மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற போது தனக்கு சிலர் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை உர்ஃபி ஜாவீத் முன்வைத்து இருக்கிறார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உர்ஃபி ஜாவீத் பகிர்ந்துள்ளார். அதாவது, மும்பையில் இருந்து கோவா செல்லும் விமானத்தில் உர்ஃபி ஜாவீத் கோடை விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது விமானத்தில் சில நபர்கள் மதுபோதையில் அவருக்கு உர்ஃபி ஜாவீத்திற்கு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் வெகுண்டெழுந்த உர்ஃபி ஜாவீத் தனக்கு நேர்ந்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவோடு பதிவிட்டுள்ளார்.

அதில் உர்ஃபி ஜாவீத் கூறியிருப்பதாவது:- மும்பையில் இருந்து கோவாவிற்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தேன். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, போதையில் இருந்த சில ஆண்கள், என்னை தொந்தரவு செய்தனர். என்னை பற்றி முகம் சுளிக்கும் வகையில் பேசியதோடு தனது பெயரையும் மோசமாக உச்சரித்து இழிவுபடுத்தினர். இது குறித்து கேட்ட போது, அந்த கும்பலில் இருந்த ஒரு நபர்.. எனது நண்பர்கள் எல்லாம் போதையில் இருக்கிறார்கள் என்று கூறினார்.
பெண்களிடம் இப்படி நடந்து கொண்டு போதையில் இருப்பதாக சாக்கு போக்கு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆமாம் பிரபலம் தான்.. அதற்காக பொதுச்சொத்து கிடையாது" என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். எனினும் விமானத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக புகார் எதையும் உர்ஃபி ஜாவீத் அளிக்கவில்லை. விமானத்தில் இந்த தொல்லையை எதிர்கொண்டாலும் திட்டமிட்ட படி கோவா சென்ற உர்ஃபி ஜாவீத் அங்கும் விதவிதமான போட்டோ சூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications