Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த 6 வார்த்தை.. ரத்தன் டாடாவின் கடைசி இன்ஸ்டா பதிவை அனைவரும் பகிர்வது ஏன்? உருக்கமான தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: முன்னணி தொழிலதிபராக அறியப்பட்ட டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நலம் குறித்து ரத்தன் டாடா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பதிவில் ரத்தன் டாடா உருக்கமாக கூறியிருந்த 6 வார்த்தை தான் காரணமாகும்.

இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.

ratan tata mumbai instagram

வயது முதிர்வு காரணமான உடல்நல பிரச்சனையால் ரத்தன் டாடா மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரத்தன் டாடாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியூவில் சிகிச்சை என்பது அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். நேற்று இரவு 11. 40 மணியளவில் ரத்தன் டாடாவின் மரணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொழில் மட்டுமின்றி ஏழைகள், தொழிலாளர்களுக்கு உதவி செய்வதிலும் வல்லவராக ரத்தன் டாடா திகழ்ந்தார். இந்தியாவின் தொழில் துறை வளர்ச்சிக்கு குறிப்பாக மோட்டார் துறை வளர பெரிய காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா தான்.

இந்நிலையில் தான் தற்போது ரத்தன் டாடாவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவை பலரும் தங்களின் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இதற்கு அந்த பதிவில் ரத்தன் டாடா குறிப்பிட்டு சொன்ன 4 வார்த்தைகள் தான் காரணம். அதாவது கடந்த 7 ம் தேதி ரத்தன் டாடா பற்றி ஒரு தகவல் பரவியது. ரத்தன் டாடா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார் என்ற தகவல் பரவியது.

ratan tata mumbai instagram

இந்த தகவலை தொடர்ந்து ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை நான் அறிந்துள்ளேன். உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என கூறியிருந்தார்.

மேலும் இந்த அறிக்கையை பதிவிட்ட அந்த பதிவில் ரத்தன் டாடா, ‛‛Thank you for thinking of me'' எனக்கூறி வெள்ளை நிற இதய இமோஜியை பதிவிட்டு இருந்தார். அதாவது என்னை நினைத்ததற்கு நன்றி எனக்கூறி ஹார்ட்டை பதிவிட்டு இருந்தார். கடந்த 7 ம் தேதி ரத்தன் டாடா இப்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த நிலையில் தற்போது அவர் மறைந்துள்ளார். இனி ரத்தன் டாடா என்பவர் நம் அனைவரின் நினைவில் மட்டுமே இருப்பார் என்பதால் அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவை பலரும் தற்போது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+