Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பை தெற்கு முஸ்லிம்களின் கோட்டை.. சண்டை செய்யும் இரண்டுமே சிவசேனாக்கள்.. ஆச்சர்யமான உண்மை

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பைக்கே நுழைவு வாயில் என்றால், அது தெற்கு மும்பை தான்.. இங்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் பிரதானமாக உள்ள நிலையில், அங்கு ஆளும் கட்சி சார்பில் ஷிண்டேவின் சிவசேனாவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் மோதுகின்றன.

இந்தியாவின் நுழைவு வாயிலாக உள்ள மும்பை மாநகரில் அரபிக்கடலை ஒட்டியுள்ள கடற்படை தளம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், பங்கு சந்தை உள்ளிட்டவைகளை கொண்ட இந்தியாவின் புகழ்பெற்ற வணிக மையமாக தெற்கு மும்பை.. மும்பை மாநகரின் அடையாளமாக இருக்கிறது.

The Muslim factor in Mumbai s South Lok Sabha seat is being affected by a fight between two Shiv Senas

இங்குள்ள பிண்டி பஜார், பைடோனி மற்றும் மஸ்ஜித் பந்தர் போன்ற பகுதிகளில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசிக்கிறார்கள்.. அதேநேரம் கல்பாதேவி மற்றும் புலேஷ்வர் போன்ற பகுதிகள் இந்துக்ககள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருக்கிறது. இங்கு 25% அளவிற்கு உள்ள முஸ்லிம் வாக்காளர்கள், தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது..

மும்பை தெற்கு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணியிலும் சரி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் சரி பேச்சுவார்த்தையின் போது பெரும் சர்ச்சை வெடித்தது. மகா கூட்டணியில் காங்கிரஸ் தெற்கு மும்பை தனது பாரம்பரிய கோட்டை என்று காரணம் காட்டி போட்டியிட விரும்பியது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமயிலான சிவசேனா (UBT) கடந்த இரண்டு தேர்தல்களில் தங்க்ள வேட்பாளர் அரவிந்த் சாவந்த் வென்றார் என்று வாதிட்டது. இறுதியில் காங்கிரஸ் விட்டுக்கொடுத்த காரணத்தால் சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் போட்டியிடுகிறார்.

அதேநேரம் இடத்தை தியாகம் செய்த காங்கிரஸின் முடிவு அக்கட்சியின் வேட்பாளரான மிலிந்த் தியோராவை மிகவும் வருத்தப்படுத்தியது, அவர் இரண்டு முறை (2004 மற்றும் 2009) வெற்றி பெற்ற தொகுதியாகும். 2014 மற்றும் 2019 தேர்தலில் தோற்றாலும் மிகவும் கிட்ட வந்தே தோற்றிருந்தார். இதனால் மீண்டும் போட்டியிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து ஏமாற்றமடைந்த தியோரா காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் (ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவு) சேர்ந்தார்.

இதனிடையே பாஜக கூட்டணியில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரண்டும் மும்பை தெற்கு தொகுதியை கேட்டு அடம் பிடித்தன. ரின. பாரதிய ஜனதா கட்சி உருவானதில் இருந்து இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றது. 1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் அக்கட்சியின் வேட்பாளர் ஜெய்வந்திபென் மேத்தா வெற்றி பெற்றார்.

2009 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதி சிவசேனா (பிரிக்கப்படாத) வென்றதாக கூறிய ஏக்நாத் ஷிண்டே பிரிவினர், தொகுதியில் தனக்கு நல்ல அமைப்பு இருப்பதாக வற்புறுத்தியது. ஆனால் மகாராஷ்டிரா மாநில சபாநாயகர் ராகுல் நர்வேகரை அந்த இடத்தில் இருந்து முன்மொழிய பாஜக விரும்பியது. நீண்ட பேச்சுவார்த்தையில் சிவசேனா தனது வேட்பாளராக யாமினி ஜாதவை நிறுத்தி உள்ளது.

யாமினி ஜாதவ் பைகுல்லா சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆவார். யாமினி மற்றும் அவரது கணவர் யஷ்வந்த் ஜாதவ் ஐடி வருமானத்தில் உள்ள முரண்பாடுகள் காரணமாக வருமான வரித்துறையின் விசாரணையின் கீழ் சிக்கி உள்ளனர். இதுதவிர அமலாக்க இயக்குநரகமும் விதிகளை மீறியதற்காக யாமினி தம்பதியருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. 2022ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவிலிருந்து இருந்து தனி அணியாக வெளியேறி பின்னர், அவரது முகாமில் சேர்ந்ந்தார் யாமினி.

மும்பை தெற்கு தொகுதியை பொறுத்தவரை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு தரப்பிலும் சிவசேனா அணிகளே களம் இறங்கி உள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், உத்தரவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கும் இடையே கடும் போட்டி இருக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் ஆதரவு இருப்பதால் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவந்துக்கு சாதகமாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த பிறகு, உத்தவ் தாக்கரே முஸ்லீம் சமூகத்துடன் நெருக்கமான உறவை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது. உத்தவ் இன்னும் தனது கட்சி இந்துத்துவா சித்தாந்தத்தை கடைபிடிப்பதாக கூறினாலும், அவர் தனது உரைகளிலோ அல்லது அவரது கட்சியின் ஊதுகுழலான சாம்னாவிலோ முஸ்லிம்களை குறிவைப்பது அரிதாகி உள்ளது. கொரோனா காலத்தில் முதல்வராக உத்தவ் தாக்கரேவின் செயல்திறன் மும்பை பகுதி முஸ்லிம்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மும்பை தெற்கு தொகுதியை பொறுத்தவரை முஸ்லிம் வேட்பாளர் இல்லாதது அரவிந்த் சாவந்திற்கு நிலைமை சாதகமாகி உள்ளதாக சொல்கிறார்கள்.

மறுபக்கம் சிவசேனா ஏக்நாத் ஷிண்டேவின் வேட்பாளர் யாமினி ஜாதவ், பாஜக ஆதரவு மற்றும் ராஜ் தாக்கரேயின் கட்சியான எம்என்எஸ் ஆதரவையும் நம்பி உள்ளன. மும்பை தெற்கு தொகுதியில் மொத்தம் உள்ள ஆறு எம்எல்ஏ தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிஸ் தலைமையிலான மகா கூட்டணி வசம் உள்ளது. மீதமுள்ள 3 பாஜக கூட்டணி வசம் இருக்கிறது. வரும் மே 20 அன்று தேர்தல் நடைபெறும் மும்பையில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளில் இதுவும் ஒன்று ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+