மாம்பழம் வேணுமா? முந்திரி காட்டில் கதறல்! பழங்குடியின சிறுமி பலாத்காரம் செய்து கொலை! பதறிய பால்கர்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் மாம்பழ தோட்டத்திற்குள் பழங்குடியினர் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கல்லால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது 2001ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டிலேயே அதிக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உத்தரப் பிரதேசமும் இரண்டாவது இடத்தில் டெல்லியும் நான்காவது இடத்தில் மகாராஷ்டிராவில் உள்ளது.

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி
மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஒரே ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக கருதப்படும் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பழங்குடியினர் சிறுமி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழங்குடியின சிறுமி கொலை
மாம்பழம் மற்றும் முந்திரி தோட்டம் அருகே இறந்து கிடந்த 16 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அங்கு இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை காலை பால்கரின் ஜவ்ஹர் தாலுகா பகுதியில் உள்ள மாம்பழம் மற்றும் முந்திரி பண்ணையை பராமரிப்பதற்காக சிறுமி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. சிறுமி வீடு திரும்பாத நிலையில், புதன்கிழமை சில உள்ளூர்வாசிகள் சிறுமியின் சடலத்தைக் கண்டனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம்
அப்பகுதியில் உள்ள மற்றொரு விவசாய வயலில் உள்ள குழியில் பலியான பழங்குடியினர் சிறுமியின் உடல் காணப்பட்டதாகவும், அவரது தலை, முகம் ஆகியவை உடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, போலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், மருத்துவப் பரிசோதனையில் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பெரும் அதிர்ச்சி
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். சனிக்கிழமையன்று, அதே பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இரண்டு ஆண்களை அவர்கள் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிறுமியைப் பின்தொடர்ந்து சென்ற மாம்பழம் தருவதாகக் கூறி அவரை முந்திரி காட்டுக்கு அழைத்துச் சென்று, நடுவில் அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்துவிட்டு, அவரது உடலை ஒரு வயல் குழியில் வீசி அதை கற்கள் மற்றும் புல்லால் மூடியுள்ளனர். மகாராஷ்டிரா பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போக்சோ சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் இருவருக்கும் எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications