2 பேர் வயிற்றில் இருந்த ரூ.30 கோடி.. மிரண்டு போன அதிகாரிகள்.. சினிமா பாணியில் ட்விஸ்ட்

மும்பை விமான நிலையத்தில் 2 பேர் தங்கள் வயிற்றுக்குள் 30 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் என்ற போதை பொருளை கடத்தி வந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை விமான நிலையத்தில் 2 பேர் தங்கள் வயிற்றுக்குள் 30 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் என்ற போதை பொருளை வைத்து கொண்டு வந்திருக்கிறார்கள்.அயன் படம் பாணியில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து மிரண்டு போன மும்பை ஏர்போர்ட் அதிகாரிகளை அவர்களை பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.

லாகோஸில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையம் வழியாக அடிஸ் அபாபாவுக்கு மார்ச் 3ம் தேதி இரு நைஜீரியர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது இரு நைஜீரியர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் , பாடி பேக்கிங் மூலம் போதை பொருளை மறைத்ததாக சந்தேகிக்கப்பட்டனர். அவர்கள் சந்தேகப்பட்டபடியே போதை பொருட்களை விழுங்கியபடி இரு நைஜீரியர்கள் வந்தது தெரியவந்தது. நைஜீரியர்களை கைது செய்த அதிகாரிகள் அவர்களை விசாரித்தனர்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

இதனிடையே கைதான இரு நைஜீரியர்களும் மும்பை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் (ACMM) முன் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அவர் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனையில் இரு பயணிகளும் ஏதோ ஒரு பொருள் அடங்கிய காப்ஸ்யூல்களை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது.

167 காப்ஸ்யூல்கள்

167 காப்ஸ்யூல்கள்

மூன்று நாட்கள் நடந்த சோதனையில் மொத்தம் 167 காப்ஸ்யூல்களை பயணிகள் விழுங்கி வந்தது தெரியவந்த . அந்த காப்ஸ்யூல்களில் சுற்றப்பட்ட பொருள் கோகோயின் பாசிட்டிவ் என்று சோதனையில் தெரியவந்தது. அந்த காப்ஸ்யூல்களில் இருந்து மொத்தம் 2.976 கிலோ கோகோயின் மீட்கப்பட்டு அவவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 29.76 கோடி ஆகும்.

விசாரணை

விசாரணை

லாகோஸில் இருந்து அடிஸ் அபாபா மும்பை வழியாக பயணித்த இரண்டு நைஜீரிய நாட்டினர் இந்தியாவிற்கு போதைப் பொருள் கடத்தப்படலாம் என்ற உளவுத்துறையின் அடிப்படையில், மும்பை விமான நிலையத்தில் DRI, MZU ஐச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அந்த சோதனையில் சிக்கிய நைஜீரிய பயணிகள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

25 கோடி ரூபாய்

25 கோடி ரூபாய்

கடந்த மாதம், டிஆர்ஐ அதிகாரிகள் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 2.5 கிலோவுக்கும் அதிகமான கோகோயின் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்றதாக இந்தியர் ஒருவரையும் கைது செய்தனர். சோப் பார்கள் வடிவில் இருந்த 2.58 கிலோ கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 25 கோடிக்கு மேல் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+