"அற்பத்தனம்!" திடீரென திரிணாமுல் & என்சிபி பக்கம் திரும்பும் தாக்ரே.. மம்தா மீது கடும் விமர்சனம்
மும்பை: சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், திடீரென எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸை விமர்சித்துக் கட்டுரை வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு நடக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
அங்குக் கடந்த 2.5 ஆண்டுகளாக சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கட்சியின் மகா விளாஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது. இருப்பினும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் மகா விளாஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மகா விளாஸ் கூட்டணி
இதனால் 2.5 ஆண்டுகளிலேயே மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்கள் பாஜக உடன் இணைந்து கூட்டணி அமைத்தனர். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக மீண்டும் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். அதைத் தொடர்ந்து யார் ரியல் சிவசேனா என்ற பஞ்சாயத்து அங்குத் தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது.

தாக்கரே
இது ஒரு புறம் இருக்க சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் உத்தவ் தாக்கரேவின் மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவரான சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை கைது செய்தது. குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்ட வேண்டிய ரூ.1,034 கோடி நிலத்தைத் தனியார்த் துறையினருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், இன்று எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கட்டுரை வெளியாகி உள்ளது.

தாக்கு
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் சஞ்சய் ராவத் தான் ஆசிரியராக இருந்தார். இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக உத்தவ் தாக்கரே ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள கட்டுரையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ துறைகளை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய அரசு குறிவைப்பதாகச் சாடி உள்ளது.

காரணம்
இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் போராட்டத்திலிருந்து விலகி இருப்பது ஜனநாயகத்திற்குக் கவலைக்குரியது என்றும் விமர்சித்து உள்ளது. கடந்த வாரம் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிராகக் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினர். அதில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காத நிலையில், அது குறித்து இந்த கட்டுரையில் விமர்சிக்கப்பட்டு உள்ளது.

ஜனநாயகத்தின் மீது கவலை
ஆளும் மத்திய பாஜகவுக்கு எதிராகத் துணிச்சலாகப் போராடி கைதான காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் அந்த கட்டுரையில் பாராட்டப்பட்டு உள்ளனர். மேலும், அந்த கட்டுரையில், "இப்போது மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் பங்கு கேள்விக்குறியாகவே உள்ளது. இது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்குக் கவலை அளிக்கிறது.

மகாராஷ்டிரா சூழல்
அமலாக்கத் துறை மூலமே இங்கு மகாராஷ்டிரா அரசு கவிழ்க்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்பட்டது. இந்த முறையைப் பயன்படுத்தி எந்தவொரு அரசும் கலைக்கப்படலாம். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கூட எவ்வித எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் இங்கு நடந்த சம்பவங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

மம்தா
முதல்முறையாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானஜ்ரிக்கு எதிரான விமர்சனத்தையும் சிவசேனா முன்வைத்துள்ளது. "சில அற்பமான காரணங்களுக்காக திரிணாமுல் எம்பிக்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கவில்லை. இது முக்கிய பிரச்சினை. வங்கத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ செயல்பாடுகள் அதிகரித்துவிட்டன.

காங்கிரஸ்
தேசிய அளவிலும் கூட ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அமலாக்கத்துறையினரால் குறிவைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்கள் பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இதைச் செய்ய வேண்டும். பாஜகவை எதிர்க்கக் கருத்து வேறுபாடுகளைக் கடந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்

பாஜக பலம்
எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பது தான் பாஜகவின் பலமாக உள்ளது. மகாராஷ்டிராவில் நடந்தது மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஒரு பாடம். ஒருவர் உண்மையிலேயே அச்சமற்றவராக இருந்தால், அவர் இந்த பாடத்தை எடுக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து பாஜகவை எதிர்ப்பது மட்டுமே நம்முன் இருக்கும் ஒரே வழி" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications