மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட பரபரப்பு.. திடீரென ரகசிய இடத்தில் சரத்பவாரை சந்தித்த உத்தவ் தாக்ரே
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் நிலைமை நொடிக்கு நொடி திருப்பங்களை சந்தித்து வரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை ரகசிய இடத்தில் சந்தித்து பேசினார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனாவை ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவை உத்தவ் தாக்கரே நாடியுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி என முடிவெடுக்கிறதோ, அதை பொருத்துதான் தங்கள் முடிவு அறிவிக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.

ஆளுநரின் கெடு முடிவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் தீவிரமான இறுதி கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் உத்தவ் தாக்ரே. இன்று மதியம் உத்தவ் தாக்கரே தனது வீட்டில் இருந்து எங்கோ, கிளம்பிச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
ஆனால், சிவசேனா வட்டார தகவல்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருடன் அவர் ரகசிய இடத்தில் சந்திப்பு நடத்தி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் போது சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்திய தாக்கரேவை முதல்வரானால், சிவசேனா மற்றும் காங்கிரஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்க தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே உறுதி அளித்து இருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரகசிய சந்திப்புகள், அவசர ஆலோசனைகள், என மகாராஷ்டிரா அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications