உதயநிதி சொந்த காலால் செல்ல முடியாது.. மகாராஷ்டிரா வந்தால் சம்பவம் செய்வோம் - பாஜக எம்எல்ஏ மிரட்டல்
மும்பை: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பகிரங்க மிரட்டலை விடுத்து உள்ளார் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.எல்.ஏ. நிதேஷ் ரானே.
சனாதன தர்மத்துக்கு எதிராக பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நாடு முழுவதும் பாஜகவினர், வலதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் மும்பை மிரா ரோடு காவல் நிலையத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதை கடந்து உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன.
அயோத்தியை சேர்ந்த சாமியார் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார். இதைவிட உச்சக்கட்டமாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தோ, "சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம். கண்ணை நோண்டுவோம்." என வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.
இந்த வரிசையில் புதிதாக இணைந்து இருக்கிறார் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.எல்.ஏவும், பாஜக மூத்த தலைவர் நாராயண் ரானேவின் மகனுமான நிதேஷ் ரானே. தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "அவர் நீதிமன்றத்துக்கு வரும் வரை காத்திருக்கிறோம். இங்கு வர அவருக்கு சவால் விடுக்கிறோம். அவரை எங்கள் பாணியில் வரவேற்கவும் தயாராக உள்ளோம். இந்து தர்மத்தை எதிர்த்து இனி யாருமே பேசக்கூடாது. அப்படி பேசுபவர்கள் மகாராஷ்டிராவுக்கு வந்தால் சொந்தக் காலில் திரும்பி செல்ல முடியாது என்பது உற்தி.

இந்து தர்மத்துக்கு எதிரான கடுமையான வாசகங்களை நாங்கள் ஏன் சகித்துக்கொள்ள வேண்டும்? இதுவே இஸ்லாம் அல்லது நபிகள் நாயகத்துக்கு எதிராக இதேபோன்ற கடுமையான கருத்தை யாராவது தெரிவித்தால் சரியா? நுபுர் ஷர்மாவுக்கு நடந்தது என்ன? அவருக்கு கொலை மிரட்டல்கள் எல்லாம் வந்தன. அவரை தலையை வெட்ட வேண்டும் என ஏராளமானோர் பேசினார்கள்.
இந்துக்களான நான் ஏன் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசும்போது சகித்துக்கொள்ள வேண்டும்? இந்து தர்மத்திற்கு எதிராக யாரேனும் கடுமையான கருத்துக்களை தெரிவித்தால் எங்களுடைய நிலைபாடும் அதுவாகவே இருக்கும்." என்று தெரிவித்து இருந்தார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications