ஏர்டெல் ஊழியரின் காலை முறித்த ஐஏஎஸ் அதிகாரி..‛‛வை-ஃபை’’ கிடைக்காததால் ஆத்திரம்.. ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: வீட்டில் புதிதாக நிறுவப்பட்ட வை-ஃபை சரியாக கிடைக்காததால் ஏர்டெல் நிறுவனத்தின் 2 டெக்னீசியனை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது சகோதரருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதில் ஒருவரின் கால் முறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அமன் மிட்டல். இவர் 2015ம் ஆண்டு பேட்ச்சில் ஐஏஎஸ் அதிகாரியானார். இவர் தற்போது மகாராஷ்டிராவில் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் துறையின் துணை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

Upset about internet problems at home, IAS officer beats up 2 Airtel engineers and One of them ended up with a broken toe

இவரது தம்பி பெயர் தேவேஷ். இந்நிலையில் தான் இருவரும் தங்களின் வீட்டில் வை-பை ரூட்டர் வீட்டில் பொருத்த வேண்டும் என்று ஏர்டெல் நிறுவனத்தின் டெக்னீசியன் பூஷன் குஜ்ஜாரை தொடர்பு கொண்டனர். இதையடுத்து அம்ரிதேஷ் சிங் என்பவர் வை-பை ரூட்டரை அவர்களின் வீட்டில் பொருத்தினர்.

வீட்டில் ‛வை-பை' கருவி பொருத்தப்பட்டாலும் கூட சரியாக அவர்களுக்கு கனெக்ட் ஆகவில்லை. நெட்வொர்க் மிகவும் ஸ்லோவாக இருந்தது. இதனால் இருவரும் கோபமடைந்தனர். இதுபற்றி அவர்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து பூஷன் குஜ்ஜார் அவர்களின் வீடுகளுக்கு சென்றார். மேலும் என்ஜினீயர் சாகர் மண்தாரே சரிசெய்யும் பணிக்காக அங்கு சென்றார்.

அப்போது தேவேஷ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி அமன் மிட்டல் ஆகியோர் ஆபாசமாக திட்டியுள்ளனர். அதோடு இருவரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். வீட்டில் இருந்து இரும்பு கம்பிகளை எடுத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி இருவரையும் கீழே தள்ளி அவர்களின் மேல் அமர்ந்து கொண்டு முகத்தில் குத்தியுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து தப்பிய பூஷன் குஜ்ஜார் சம்பவம் குறித்து ராபாலி போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பிரச்சனையை முடிவுக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே ஐஏஎஸ் அதிகாரி அமன் மிட்டல் மற்றும் அவரது சகோதரர் தேவேஷ் ஆகியோர் நடத்திய தாக்குதலில் ஒருவரின் காலில் முறிவு ஏற்பட்டது.

தற்போது அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுபற்றிய புகாரில் பேரில் போலீசார் ஐஏஎஸ் அதிகாரி் அமன் மிட்டல் அவரது சகோதரர் தேவேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+