Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்ல காலம் பொறக்குது.. சில நிமிஷத்தில் நிமிர்ந்த ஷேர் மார்க்கெட்! கட்டு கட்டாய் அள்ளிய நிறுவனங்கள்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நீண்ட கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு புதிய வர்த்தக ஒப்பந்தம்அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக ஒப்பந்த குறித்த அறிவிப்பு வெளியானதும் சென்செக்ஸ் 3,656 புள்ளிகளும், நிஃப்டி 1,219 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்றது. சென்செக்ஸ் தொடக்க வர்த்தகத்தில் 85,323.20 புள்ளிகளில், நிஃப்டி 26,308.05 புள்ளிகளில் தொடங்கிய நிலையில், இரு குறியீடுகளும் தொடர்ந்து ஏற்றம் கண்டதால் முதலீட்டாளர்களுக்கு சந்தையில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

உக்ரைன் போருக்கு காரணமான ரஷ்யாவிடம் எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை இந்தியா மேற்கொண்டதால் பல்வேறு பொருளாதார அழுத்தங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு அளித்து வந்தது. குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை திடீரென உயர்த்தியது.

இதனால் இந்தியாவின் 'டாலர் நகரங்கள்' கடும் சிரமத்தை சந்தித்தன. அமெரிக்கா விதித்துள்ள வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த நிலையில், இந்தியா சார்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

US India Stock Market

இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட 50% வரியை 18 சதவீதமாக குறைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் திடீரென பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் சிறந்த விகிதத்தில் உயர்வு கண்ட நிறுவனங்களில் அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல் பஜாஜ் ஃபின்சர்வ், இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உள்ளன். இந்த நிறுவனங்களின் பங்குகள் 3.7 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரை உயர்ந்தன. முன்னணி நிறுவனங்களில் ஐடிசி மட்டுமே சிறிய சரிவைச் சந்தித்தது.

முதலீட்டாளர்கள்

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு வியூக நிபுணர் வி.கே.விஜயகுமார் பேசுகையில், "இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் வளர்ச்சி சார்ந்த பட்ஜெட் ஆகியவை பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. முதலீட்டாளர்கள் சந்தையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதனால் பங்குச் சந்தை இன்று பெரிய ஏற்றத்தை காண்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்

இந்த ஒப்பந்தம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததும், அதற்குப் பிறகு உலக அளவில் செய்தி வெளியானது. பிரதமர் மோடியும் மத்திய பொருளாதார அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் இதனை உறுதிப்படுத்தினர். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படுவதாகும். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதால் விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியும் ரத்து செய்யப்பட்டது.

இறக்குமதி வரி

இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரி இனி 18 சதவீதமாக குறைகிறது. மேலும், இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளை அமெரிக்கா இலிருந்து இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை பூஜ்ஜியமாகக் குறைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாட்டு பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று அமித் ஷா மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டனர்.

இந்திய பொருளாதார வளர்ச்சி

இதன் எதிரொலி பங்குச் சந்தைகளில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியதால், முதலீட்டாளர்கள் சந்தையில் அதிக ஆர்வத்துடன் பங்குகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகள் மட்டுமல்ல, இந்திய பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு நம்பிக்கை மற்றும் பங்கு சந்தையின் நிலைத்தன்மை ஆகியவையும் வலுவடையும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+