மகாராஷ்டிராவில்.. வெறும் 78 ஓட்டுகள் மட்டுமே பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட விசிக வேட்பாளர்!
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இம்மாநிலத்தில் ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெறும் 78 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் கொண்ட மாநிலங்களில் முதன்மையானதாக மகாராஷ்டிரா பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் முடிவடைவதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் கடந்த 20ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மாநிலத்தில் இரண்டு கூட்டணிகள் களமிறங்கின. ஒன்று மகாயுதி கூட்டணி. இதில் பாஜக 149 தொகுதிகளிலும், ஷிண்டே சிவசேனா 81 தொகுதியிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதியிலும் களம் இறங்கியிருந்தது. இக்கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் மகா விகாஸ் அகாடி எனும் கூட்டணியை அமைத்திருந்தது. இதில் காங்கிரஸ் 101, உத்தவ் சிவசேனா 95 மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 தொகுதிகளில் களம் கண்டன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
மாலை 5 மணி மணி நிலவரப்படி, 132 இடங்களில் பாஜக முன்னணியில் உள்ளது. 55 இடங்களில் ஷிண்டே சிவசேனாவும், 41 இடங்களில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸும் முன்னணியில் இருக்கிறது. மறுபுறம் காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் சிவசேனா 21 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் சமாஜ்வாடி 2 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன. கோப்ரி-பச்பகாடி, நாகபுரி தென்மேற்கு, பாராமதி, சகோலி, வொர்லி உள்ளிட்ட தொகுதிகள் ஸ்டார் தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.
மறுபுறம் பெரிய கட்சிகள் அல்லாமல் சில சிறிய கட்சிகளும் போட்டியில் இருக்கின்றன. இந்த சிறிய கட்சிகளின் லிஸ்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒன்று. இக்கட்சியின் சார்பில் போகர்தான் தொகுதியில் சுனில் லக்ஷமனராவ் என்பவர் போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் பாஜகவின் தன்வே சந்தோஷ் என்பவருக்கும், சரத்பவார் தேசியவாத காங்கிரஸின் சந்திரகாந்துக்கும் இடையேதான் நேரடி போட்டி. மாலை 5 மணி நிலவரப்படி இந்த தொகுதியில் சந்தோஷ் 17,391 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.
ஆனால் விசிக வேட்பாளர் சுனில் வெறும் 78 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். இவரை விடவும் குறைவாக சுயேட்சை வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றிருக்கின்றனர். ஆயினும், தலித் உரிமைகளுக்காக வீரியமாக போராடுவதாக அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு கட்சி, மகாராஷ்டிராவில் மிக குறைவான வாக்குகளை பெற்றிருப்பது விவாதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications