மவுன விரதம் + பாகிஸ்னுக்கு பறந்த வீடியோ கால்! பாபா சித்திக்கை கொலை செய்த பிஷ்னோய் கேங்! என்ன நடந்தது
மும்பை: மகாராஷ்டிர அரசியல்வாதி பாபா சித்திக் படுகொலை இப்போது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையே பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடியே பாக். தாதா ஒருவரிடம் வீடியோ காலில் பேசுவது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் பாபா சித்திக்.. இதற்கு முன்பு நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், சமீபத்தில் தான் அஜித் பவாரின் என்சிபி கட்சியில் இணைந்தார்.

படுகொலை: இவரது மகன் ஜீஷன் சித்திக்கின் எம்எல்ஏவாக இருக்கிறார். மகனின் அலுவலகத்திற்கு நேற்றிரவு சென்றிருந்த 66 வயதான பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்றனர். இது மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருப்பதையே இது காட்டுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
பல்வேறு பாலிவுட் பிரபலங்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தவர் இந்த பாபா சித்திக். இவரது மறைவு செய்தி கேட்டு நடிகர் சல்மான் கான் தனது பிக்பாஸ் ஷூட்டிங் ரத்து செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கே விரைந்தார். அந்தளவுக்குப் பாலிவுட்டில் பல பிரபலங்களுடன் நெருங்கிய உறவைப் பாபா சித்திக் கொண்டிருந்தார். பாபா சித்திக் கொலைக்குப் பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இந்த லாரன்ஸ் பிஷ்னோய் கேங் தான் இதற்கு முன்பு நடிகர் சல்மான் கானையும் கொலை செய்ய முயன்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறையில் இருந்து வீடியோ கால்: லாரன்ஸ் பிஷ்னோய் இப்போது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அங்கிருந்தபடியே அவரால் வெளியே உள்ள தனது கூட்டாளிகளைத் தொடர்பு கொள்ள முடிகிறதாம். இதனால் சிறையில் இருந்தாலும் வெளியே பல சதித்திட்டங்களை அவர் தீட்டி வருகிறார். இதற்கிடையே சிறையில் இருந்தபடி தாதா பிஷ்னோய் பாகிஸ்தானில் உள்ள ஒரு தாதாவிடம் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கந்த ஜூன் மாதம் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த கேங்ஸ்டர் ஷாஜாத் என்பவருடன் லாரன்ஸ் பிஷ்னோய் வீடியோ காலில் பேசியுள்ளார். இது தொடர்பாக 19 வினாடி இணையத்தில் இப்போது பரவி வருகிறதது.
.எப்படி: பிஷ்னோய் சிறையில் எப்படி மொபைல் பயன்படுத்துகிறார் என்பது குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது லாரன்ஸ் பிஷ்னோய் எப்போதும் தன்னிடம் செல்போன் வைத்திருக்க மாட்டானாம். வேறு கைதிகளின் செல்போனை வாங்கியே பயன்படுத்துவானாம். முன்பு பஞ்சாப் பாடகர் சிந்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்ட போதும் இந்த லாரன்ஸ் பிஷ்னோய் பெயர் அடிப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் லாரன்ஸ் பிஷ்னோய் செல்போன் வைத்திருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இருப்பினும், இந்தத் தகவல்களை ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து மறுத்தே வருகின்றனர்.
மவுன விரதம்: கடந்த 9 நாட்களாக லாரன்ஸ் பிஷ்னோய் யாரிடமும் பேசாமல் மவுன விரதத்தில் இருக்கிறாராம். ஒவ்வொரு முறையும் அவரது கேங் பெரிய படுகொலை சம்பவத்தை நிகழ்த்தும் போது எல்லாம் லாரன்ஸ் பிஷ்னோய் மவுன விரதத்தில் இருப்பார். அதுபோலத் தான் இந்த முறையும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications