விராட் கோலியின் காதல் கதை.. ஐபிஎல் பிரமோஷனின் போது வெளிப்படை பேச்சு.. இவ்வளவு நடந்திருக்கா??
மும்பை: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, எப்படி அனுஷ்கா சர்மாவுடன் காதல்வயப்பட்டார் மற்றும் இருவருக்கும் உண்டான ஆரம்பகால சந்திப்புகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த முறை அனைத்து அணிகளும் ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்காக அணி வீரர்களும் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டனர்.

ஆர்சிபியின் கனவு
இந்த முறை அதிக கவனம் ஈர்க்கும் அணிகளில் ஆர்சிபி அணியும் முக்கியமான ஒன்று எனக்கூறலாம். 15 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்லாமல் உள்ள அந்த அணியில் இந்த முறை டூப்ளசிஸ் தலைமையிலாவது வெல்ல வேண்டும் என காத்துள்ளது. மறுபுறம் நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில் இந்த எதிர்பார்ப்புக்கு இடையே தான் ரசிகர்களுக்கு சுவாரஸ்ய கதையை கூறியுள்ளார் கோலி.

கோலி காதல் கதை
ஆர்சிபி அணியின் ஷூட்டிங்கில் டிவில்லியர்ஸ் மற்றும் கோலி உரையாடல் நடத்திக்கொண்டனர். அதில் கோலி தனது காதல் குறித்து பேசியுள்ளார். 2013ம் ஆண்டு தான் முதல் நிகழ்வு ஏற்பட்டது. ஜிம்பாப்வே தொடருக்கு நான் கேப்டனாக செயல்பட்டு வந்த போது எனது மேனேஜர் என்னிடம் வந்து நீங்கள் விளம்பரத்தில் நடிக்க ஆஃபர் வந்துள்ளது எனக்கூறினார். அதற்கு நான் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஆனால் அதன்பின்னர் தான் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதை கூறினார்கள்.

கூறிய முதல் வார்த்தை
அனுஷ்காவை பார்த்த உடனேயே அவர் நிஜமாகவே இவ்வளவு உயரமா என்று தான் தோன்றியது. ஏனென்றால் அவர் ஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்துகிறார் என்று தான் நினைத்திருந்தேன். எனவே உடனடியாக அவரிடம் சென்று " நீங்கள் உயரமாக இருக்க எதையும் பயன்படுத்தவில்லையா?" என்று தான் கேட்டேன். இதற்கு அவர் முகம்சுழித்து பேச, எனக்கும் பதற்றம் ஏற்பட்டுவிட்டது.

நீண்ட நாள் காத்திருப்பு
எனினும் அதன் பிறகு தான் அனுஷ்கா மிகவும் தன்மையாக பேசக்கூடியவர் எனத் தெரிந்தது.இருவரின் பின்புலமும் ஒரே மாதிரியாக இருந்ததால் நெருக்கமானோம். அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி டேட்டிங் செய்தோம். எங்களுக்குள் உடனடியாக காதல் ஏற்பட்டுவிடவில்லை. அதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டது என கோலி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications