எங்களுக்கு கல்யாணம் ஆகல..இதுக்கு அரசு தான் பொறுப்பு..மணக்கோலத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்த இளைஞர்கள்
மும்பை: திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை எனக்கூறி அதிருப்தி அடைந்த சில இளைஞர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதிலும் இந்தப் பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் மணமகன் கோலத்தில் பாரம்பரிய உடை அணிந்து குதிரை, மேளதாளங்கள் முழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு பெண் பார்த்து முடிப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடுவதாக பல 90 கிட்ஸ்கள் புலம்புவதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
அதுவும் எங்களுக்கெல்லாம் திருமணம் நடக்குமா நடக்காதா.. என நேரடியாக கடவுளிடம் கேட்கிறோம்.. என்று புலம்பி அதகளம் செய்து 90 கிட்ஸ்கள் போடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பலரும் பார்த்து இருப்போம்.

ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி
சமூக வலைத்தளங்களில் இப்படி புலம்புவது எல்லாம் சர்வ சாதாரணமாகிட்டது. இதில் வியப்பதற்கு எதுவும் இல்லைதான்.. ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு படி மேலே போய்.. திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை எனக்கூறி அதிருப்தி அடைந்த சில இளைஞர்கள், பேரணி நடத்தி புருவத்தை உயர்த்த வைத்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில்தான் தங்களுக்கு பெண் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தியுள்ளனர்.

பெண் கிடைக்க அரசு ஏற்பாடு செய்யனும்
இந்தப் பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் மணமகன் கோலத்தில் பாரம்பரிய உடை அணிந்த குதிரை, மேளதாளங்கள் முழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றனர். தங்களுக்கு பெண் கிடைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று மனுவும் அளித்ததுதான் ஹைலைட். இந்தப் பேரணியை ஜோதி கிரன்ந்தி பரிஷத் என்ற அமைப்பு ஏற்பாடு செய்து இருந்தது. அந்த அமைப்பின் நிறுவனரான பரஸ்கர் என்பவர் கூறியதாவது:-

அரசாங்கமே பொறுப்பு
பெண் வேண்டும் என்று கோரி இளைஞர்கள் நடத்திய இந்த பேரணியை மக்கள் கேலி செய்யக்கூடும். ஆனால், கசப்பான உண்மை என்னவென்றால் ஆண்- பெண் பாலின விகிதம் குறைபாட்டால் இங்கு பல இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது இல்லை. அதிக அளவிலான ஆண்கள் மணப்பெண் கிடைக்காமல் திருமணம் முடிக்காமல் இருக்கின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற பாலின விகிதமே உள்ளது. பெண் சிசுக்கொலைகள் காரணமாக இந்த ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கமே பொறுப்பு" என்றார்.

பாலின விகிதம்
இந்தியாவில் 2022 நிலவரப்படி ஆயிரம் ஆண்களுக்கு 1020 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் இருப்பதாக தரவுகள் சொல்கின்றன. நகர்புறங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதம் உள்ளது எனவும் தரவுகள் காட்டும் தகவலாக இருக்கிறது. பெண் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டே இருக்காமல் எங்களுக்கு பெண் பார்த்து வையுங்கள் என்று கேட்காத குறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மகராஷ்டிர மாநில இளைஞர்கள் பேரணியாக சென்று மனு கொடுத்தது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசு தலையிடும் அளவுக்கு..
இணைய தளங்களிலும் பலரும் இது குறித்த செய்திகளை தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து ஜாலியாக அரட்டையும் அடித்து வருகின்றனர். பலரும் இந்த விவகாரத்தில் அரசு தலையிடும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதா? எனவும் விவாதித்துக்கொள்வதையும் காண முடிகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications