ஒட்டுமொத்த சீனாவையும் அலறவிட்ட மும்பை.. ஆசியாவில் அதிக பணக்காரர்களை கொண்ட நகரங்களில் முதலிடம்! சபாஷ்
மும்பை: ஆசியாவில் அதிக பில்லியனர்களை கொண்ட நகரங்கள் பட்டியலில் பெய்ஜிங்கை பின்னுக்குத் தள்ளி மும்பை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் உள்ள கோடீஸ்வரர்கள் குறித்த ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும். அதன்படி இந்தாண்டிற்கான பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை சீன தலைநகர் பெய்ஜிங்கை ஓவர்டேக் செய்துள்ளது. இதன் மூலம் பெய்ஜிங்கை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் கோடீஸ்வர நகரமாக மும்பை உருவெடுத்துள்ளது.
கோடீஸ்வரர்கள்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் 91 கோடீஸ்வரர்கள் இருக்கும் நிலையில், 92 கோடீஸ்வரர்களை கொண்ட நகரமாக மும்பை உருவெடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் மும்பை 26 புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கி இருக்கிறது. இதே காலகட்டத்தில் பெய்ஜிங் 18 கோடீஸ்வரர்களை இழந்துள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில் மேலும், "உலகில் வேகமாக வளர்ந்து வரும் பில்லியனர்களின் தலைநகரமாக மும்பை இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 26 பில்லியனர்களை மும்பை தனது லிஸ்டில் சேர்த்துள்ளது. இதன் மூலம் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நகரங்கள் லிஸ்டில் உலகின் மூன்றாவது இடத்திலும் ஆசியாவில் முதல் இடத்திற்கும் மும்பை சென்றுள்ளது. தேசிய தலைநகரான டெல்லியும் முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எங்கே அதிகம்: சர்வதேச அளவில் பார்க்கும்போது 119 பெரும் பணக்காரர்களைக் கொண்டு நியூயார்க் முதல் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 97 பெரும் பணக்காரர்களுடன் லண்டன் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், மும்பை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், எந்த நாட்டில் அதிக பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்ற லிஸ்டையும் இவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக இன்று உலகில் 3,279 பில்லியனர்கள் உள்ளனர், அவர்களில் 167 பேர் புதிதாக இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் இருந்து 109 பில்லியனர்கள் இந்த லிஸ்டில் இந்தாண்டு சேர்ந்துள்ளனர். இதன் மூலம் 800 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இதே காலகட்டத்தில் சீனா, 155 பில்லியனர்களை இழந்துள்ள போதிலும், 814 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்தியா: இந்தியாவில் கடந்த ஓராண்டில் 84 கோடீஸ்வரர்கள் புதிதாக இந்த லிஸ்டில் இணைந்துள்ள நிலையில், 271 பில்லியனர்களுடன் இந்தியா இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, இந்தியாவில் துறை ரீதியாகப் பார்க்கும் போது மருந்துகள் அதாவது Pharmaceuticals துறையில் தான் அதிகபட்சமாக 39 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். தொடர்ந்து ஆட்டோமொபைல் சார்ந்த துறைகளில் 27 பணக்காரர்கள் உள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும், "இந்தியாவில் கடந்த ஓராண்டில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெய்ஜிங்கை பின்னுக்குத் தள்ளி மும்பை ஆசியாவின் பில்லியனர் மையமாக மாறியுள்ளது. இந்தியாவில் இப்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. இது அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்குக் கிடைக்கும் வாய்ப்பை தெளிவாகக் காட்டுகிறது. வரும் காலத்தில் இந்தியா சர்வதேச அளவில் நிச்சயம் பவர்புல் நாடுகளில் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மற்ற உலக நாடுகள்: சீனாவுக்கு இந்தாண்டு ரொம்பவே மோசமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை ஓராண்டில் 20% குறைந்துள்ள நிலையில், ஷென்சென் நகரில் இருக்கும் பணக்காரர்கள் லிஸ்ட் 19 சதவிகிதமும் ஷாங்காய் நகரில் உள்ள பணக்காரர்கள் லிஸ்ட் 7% குறைந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, இந்தியாவைத் தாண்டி பிரிட்டன், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளும் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications