Ajit Pawar: "4-5 முறை வெடிச்சுது! எங்களால் கிட்ட கூட போக முடியல!" அஜித் பவார் விமான விபத்தை நேரில் கண்டவர் பகீர்
மும்பை: மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார் (Ajit Pawar demise) சென்ற விமானம் பாராமதியில் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே விமானத்தில் கடைசி நேரத்தில் என்ன நடந்தது.. அது எப்படிச் சரிந்து விழுந்தது என்பது தொடர்பான முக்கிய தகவல்களை விபத்தை நேரில் பார்த்தவர் கூறியிருக்கிறார்.
மஹாராஷ்டிராவின் பாராமதியில் இன்று காலை 8.45 மணியளவில் அஜித் பவார் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது. பாராமதியில் ஏர்போர்ட் சிறியது. அந்த இடத்தில் விமானம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் பயணித்த அனைவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விபத்தை நேரில் பார்த்தவர் தனது திகிலூட்டும் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து விபத்தை நேரில் பார்த்தவர் கூறுகையில், "இந்த விபத்தை நான் என் கண்களால் பார்த்தேன். இது மிகவும் வேதனையானது. விமானம் சட்டென கீழே சரிந்தது.. சில நொடிகளில் அது மளமளவென சரிந்தது.. பார்க்கவே பயமாக இருந்தது. எதிர்பாராத நேரத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.. பிறகு விமானம் வெடித்தது. விமானத்தில் இருந்து பெரியளவில் வெடிப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு, நாங்கள் விரைந்து சென்று பார்த்தபோது, விமானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதன் பிறகும் கூட விமானம் 4, 5 முறை வெடித்துச் சிதறியது. அதற்கு அக்கம் பக்கத்தில் இருந்த பலரும் விமான விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். விமானத்தில் சிக்கியிருந்தவர்களை வெளியே கொண்டுவர முயன்றனர். ஆனால், அது பெரியளவில் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததால்.. பொதுமக்களால் உதவ முடியவில்லை.
விமானம் அருகே செல்ல முடியவில்லை.. அஜித் பவார் அந்த விமானத்தில் இருந்தார்.. இது எங்களுக்கு மிகவும் வேதனையானது. இதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது..." என்று அவர் தெரிவித்தார்..
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications