Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசேனா: மகாராஷ்டிரா சபாநாயகர் அதிரடி தீர்ப்பு-உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு- 2022-ல் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானதுதான் உண்மையான சிவசேனா என சபாநாயகர் ராகுல் நார்வேகர் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார். 2022-ல் மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

மகாராஷ்டிராவில் 2019 சட்டசபை தேர்தல் நடைபெற்ற பின்னர் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்தார். ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸுடனான கூட்டணியால் சிவசேனா அடையாளத்தை இழக்கிறது என சிவசேனா எம்.எல்.ஏக்கள் கலகக் குரல் எழுப்பினர்.

What is dispute of Maharashtra Shiv Senas 54 MLAs disqualification?

ஷிண்டே கோஷ்டி கலக குரல்: 2022-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து உடனடியாக சட்டசபை சிவசேனா குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டு அஜய் சவுத்ரியை நியமித்தது உத்தவ் தாக்கரே தரப்பு. அதேபோல கட்சியின் புதிய கொறடாவாக சுனில் பிரபுவையும் உத்தவ் தாக்கரே தரப்பு நியமித்தது. ஆனால் சட்டசபை சிவசேனா குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து நீடிப்பார் எனவும் சிவசேனா புதிய கொறடாவாக பரத்ஷெட் கோகாவாலே நியமிக்கப்படுவதாகவும் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி கோஷ்டி தீர்மானம் நிறைவேற்றியது.

54 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் கோரி மனு: இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தரப்பின் கொறடா சுனில் பிரபு கூட்டிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. ஆகையால் இந்த 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதன் பின்னர் ஏக்நாத் ஷிண்டே தரப்பின் மேலும் 22 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் உத்தவ் தாகக்ரே தரப்பு மனு கொடுத்தது. 3-வது முறையாக மேலும் 2 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியது உத்தவ் தாக்கரே தரப்பு. மொத்தமாக ஷிண்டே தலைமையிலான கோஷ்டியில் இருந்த 40 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரியது உத்தவ் தாக்கரே தரப்பு. இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான 14 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியது ஏக்நாத் ஷிண்டே தரப்பு. மொத்தமாக 54 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் கோரிக்கை சபாநாயகர் ராகுல் நார்வேகர் முன்பாக வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் உச்சநீதிமன்றத்தில் இருதரப்பும் வழக்கு தொடர்ந்தன. உச்சநீதிமன்றத்தின் கடும் அதிருப்தி, எச்சரிக்கைக்கு பின்னர் சபாநாயகர் ஒருவழியாக 54 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து விசாரணை நடத்தினார்.

சபாநாயகர் முன் வைக்கப்பட்ட வாதங்கள்: உச்சநீதிமன்றத்தின் கிடுக்குப்பிடிக்குப் பின் சபாநாயகர் நடத்திய விசாரணையில், கொறடா சுனில் பிரபு கூட்டிய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத 40 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியது உத்தவ் தாக்கரே தரப்பு. ஆனால் 40 எம்.எல்.ஏக்களுமே தங்களுக்கு அப்படியான ஒரு கூட்டம் தொடர்பாக எந்த தகவலுமே தெரிவிக்கப்படவில்லையே; அதனால் கொறடா உத்தரவை மீறினோம் என்கிற பிரச்சனையே இல்லை என வாதிட்டது. மேலும் தகுதி நீக்க பிரச்சனை வராமல்தான் ஒரு குழுவாகவே உத்தவ் தாக்கரே அரசில் இருந்து வெளியேறி புதிய அரசை உருவாக்கினோம் என்றது ஷிண்டே தரப்பு. அத்துடன் உத்தவ் தாக்கரே தரப்பு போலியான ஆவணங்களை தாக்கல் செய்தது எனவும் ஷிண்டே தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் உத்தவ் தாக்கரேவுக்கு ஷிண்டே கோஷ்டி ஆட்சி அமைக்கும் போதே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது. இந்த விவகாரத்தில்தான் இன்று மாலை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தமது அதிரடி தீர்ப்பை வழங்கினார்.

சபாநாயகர் ராகுல் நார்வேகர் தமது தீர்ப்பில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலானதே உண்மையான சிவசேனா. ஏக்நாத் ஷிண்டேவை சட்டசபை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என அதிரடியாக தெரிவித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பு உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. ஏற்கனவே தேர்தல் ஆணையமும் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவே தீர்ப்பளித்து ஏக்நாத் ஷிண்டேவை உண்மையான சிவசேனா என அங்கீகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+