இரவு நேர பார்ட்டி.. சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட போன்.. சுஷாந்த்சிங் தற்கொலைக்கு முன் என்ன நடந்தது?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட நிலை, அவர் தற்கொலை குறித்த முக்கியமான விவரங்கள் வெளியாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட நிலை, அவர் தற்கொலை குறித்த முக்கியமான விவரங்கள் வெளியாகி வருகிறது.

Recommended Video

    பெண் மேனஜர் தற்கொலை... அடுத்த வாரமே Sushant Singh தற்கொலை.. என்ன நடந்தது?

    இந்த 2020ம் வருடம் இன்னும் எத்தனை சோகங்களை கொண்டு வர போகிறதோ தெரியவில்லை.. கொரோனா மற்றும் அதன் தொடர்பான மரணங்களை தொடர்ந்து தற்போது இன்னொரு சோகம் இந்தியா முழுமையையும் ஆக்கிரமித்து உள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் நடித்த தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ms dhoni the untold story படம் நாடு முழுக்க பிரபலம்.

    தற்கொலை விவரம்

    தற்கொலை விவரம்

    இந்த நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக முக்கியமான விவரங்கள், தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மதியத்திற்கு மேல்தான் சுஷாந்த்சிங் உடல் அவரின் அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டு, போலீசார் வந்து அவரின் உடலை மீட்டனர். இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தற்கொலைக்கு முன்

    தற்கொலைக்கு முன்

    தற்கொலைக்கு முன் இவருக்கு என்ன நடந்தது என்று விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி நேற்று இரவு சுஷாந்த்சிங் தனது வீட்டில் பார்ட்டி ஒன்று கொடுத்துள்ளார். ஆனால் இதற்கு எல்லோரையும் அவர் அழைக்கவில்லை. வெகு சில நெருக்கமான நண்பர்களை மட்டுமே அவர் அழைத்து இருக்கிறார். அதேபோல் சில நெருக்கமான குடும்ப உறுப்பினர்களையும் அவர் இந்த பார்ட்டிக்கு அழைத்து உள்ளார்.

    அதிகாலை வர சென்றது

    அதிகாலை வர சென்றது

    அதன்பின் இந்த பார்ட்டி அதிகாலை வரை சென்று இருக்கிறது. அதிகாலை 3 மணிக்குத்தான் இந்த பார்ட்டி முடிந்துள்ளது. அதன்பின் எல்லோரும் சென்ற பின் சுஷாந்த்சிங் உறங்க சென்றுள்ளார். அதன்பின் இன்று காலை அவரின் வீட்டிற்கு வேலைக்காரர்கள் வந்துள்ளனர். வீட்டை சுத்தம் செய்துவிட்டு சுஷாந்த்சிங் அறையை சுத்தம் செய்ய கதவை தட்டி இருக்கிறார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் சுஷாந்த்சிங் அப்போது கதவை திறக்கவில்லை. இதனால் சுஷாந்த்சிங் களைப்பில் தூங்குவார் என்று நினைத்து உள்ளனர். பின் அவருக்கு மதியம் போன் செய்து பார்த்துள்ளனர். அப்போது போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. பல மணி நேரம் கதவை தட்டியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுஷாந்த்சிங் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் செய்துள்ளனர்.

    கதவை உடைத்தனர்

    கதவை உடைத்தனர்

    அதன்பின் அவரின் நண்பர்கள் அங்கே வந்து கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். அப்போதுதான் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் போலீசார் வந்து உடலை மீட்டனர் .

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+