Smriti Mandhana: கண்ணீர், மயக்கம், உடல்நலக் குறைவு.. ஸ்மிருதி மந்தனா திருமண நாளில் அந்த 4 மணி நேரம் நடந்தது என்ன?
மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இருப்பினும், அன்றைய தினம் அவரது தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் திருமணத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. இவர்களின் திருமணம் முதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. இருப்பினும், திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருமணம் ஒத்திவைப்பு
இதையடுத்து திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சர்ச்சை முடிவதற்கு உள்ளேயே நேற்றைய தினம் மாப்பிள்ளையான பலாஷும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டது. அவருக்கு வைரஸ் தொற்று மற்றும் அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் மகாராஷ்டிரா மாநிலம் சங்கலியில் உள்ள தனியார் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
உடல்நலக்குறைவு
மும்பையின் கோரேகானில் உள்ள எஸ்.வி.ஆர் மருத்துவமனையில் பலாஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இசையமைப்பாளரான அவர் தொடர்ச்சியாகப் பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும், திருமண பயணங்களால் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பலாஷுக்கு எந்தளவுக்குத் தீவிரமான உடல்நிலை பாதிப்பு என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தாய் சொன்ன தகவல்
அதேநேரம் ஸ்மிருதியின் தந்தை நோய்வாய்ப்பட்ட பிறகு, திருமணத்தை ஒத்திவைக்கலாம் என முதலில் பலாஷ் தான் சொன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பலாஷின் தாயார் அமிதா ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனா மீது பலாஷுக்கு மிகப் பெரிய அன்பும் மரியாதையும் இருக்கிறது. இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு என்ற செய்தியைக் கேட்டதும் பலாஷ் வேதனை அடைந்தார்.
இதன் காரணமாக பலாஷ் திருமணச் சடங்குகளை ஒத்திவைக்க முடிவு செய்தார். தனது மாமனாருக்கு இப்படி ஆனதை நினைத்து அவர் வேதனை அடைந்தார். ஸ்மிருதியை விட பலாஷ் தனது மாமனாருடன் நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை எனத் தெரிந்தவுடன் மாமனார் குணமடையும் வரை திருமணத்தைத் தள்ளி வைக்கலாம் என பலாஷ் கூறினார். ஸ்மிருதிக்கு முன்பே பலாஷ் இந்த முடிவை எடுத்திருந்தார்" என்றார்.
4 மணி நேரம்
ஸ்மிருதி மந்தானா தந்தையின் இதயப் பிரச்சனை தன் மகனையும் பாதித்ததாக பலாஷின் தாயார் கூறினார். பலாஷ் தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "மந்தனா தந்தைக்கு உடல்நலக்குறைவு என தெரிவதற்கு முன்பு, சில சடங்குகள் செய்திருந்தோம். இதனால் நாங்கள் அவரை வெளியே செல்ல விடவில்லை. சுமார் 4 மணி நேரம் அழுது கொண்டே இருந்தார். இடைவிடாமல் அழுததில் உடல்நிலை மோசமானது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டிரிப்ஸ் போட்டார்கள்.. இ.சி.ஜி எடுக்கப்பட்டது.. மேலும் சில சோதனைகளை மேற்கொண்டனர். டெஸ்ட் முடிவுகள் நார்மலாகவே இருந்தது. இருப்பினும், மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்" என்றார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications