"பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது.. நீங்கள் என்ன செய்தீர்கள் என தெரியும்" உத்தவ் தாக்ரே சுளீர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: அனுமன் ஜெயந்தி, ஒலிபெருக்கி பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே பாஜகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாடு முழுக்க கடந்த வாரம் அனுமன் ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.

அடுத்தடுத்து அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் பொது நிகழ்ச்சியில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே பாஜகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

 உத்தவ் தாக்ரே

உத்தவ் தாக்ரே

பாஜக நேரத்திற்கு ஏற்றார் போல இந்தவதத்தைக் கையில் எடுத்துக் கொள்வதாகச் சாடிய உத்தவ் தாக்ரே, "ஹனுமான் கோஷங்களை எழுப்ப விரும்பினால், நீங்கள் (பாஜகவினர்) அதை தாராளமாக எழுப்பலாம் ஆனால் அதன் மூலம் பிரச்சினை செய்ய முற்பட்டால், அதை எப்படி உடைப்பது என்றும் எங்களுக்குத் தெரியும். சிவசேனாவுக்கு சவால் விட்டால் பிறகு என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும். ஹனுமானைப் போல் எங்கள் இந்துத்துவா கொள்கைகள் வலிமையானது.

 என்ன செய்தார்கள்

என்ன செய்தார்கள்

கடந்த சில நாட்களாக சிவசேனா இந்துத்துவாவை விட்டுவிட்டதாக அவர்கள் (பாஜக) கதறி வருகின்றனர். நாம் என்ன விட்டுவிட்டோம்? இந்துவத்துவத்தை வேஷம் போடுவதைப் போலத் தேவைப்பட்டால் போட்டுவிட்டு. தேவையில்லை என்றால் கழற்றி வைக்க முடியாது. இந்துத்துவா பற்றி எங்களுக்கு அட்வைஸ் செய்பவர்கள் இந்துத்துவாவுக்கு என்ன செய்தார்கள் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்

 பாபர் மசூதி

பாபர் மசூதி

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ​​​நீங்கள் ஓடிவிட்டீர்கள். ராமர் கோயில் கட்டுவது என்பது நீதிமன்றத்தின் முடிவு தானோ தவிர உங்கள் அரசின் அல்ல. ராமர் கோயில் கட்டும்போது, அதை நீங்கள் சாதித்தது போலக் காட்டிக் கொள்கிறீர்கள். இதில் உங்கள் இந்துத்துவா எங்கே? சிவசேனாவை தோற்றுவித்த பால் தாக்ரே நமக்குக் கற்றுக் கொடுத்த இந்துத்துவா, அதைப் பின்பற்றும் அனைவரின் மனதிலும் இன்னும் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

 மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்ரே வீட்டின் முன்பு, அனுமன் கோஷங்களை எழுப்பியதாகச் சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர், எம்எல்ஏ ரவி ராணாவை கைது செய்து இருந்தது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறி இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவருக்கும் பாஜக ஆதரவளித்து வரும் நிலையில், மகாராஷ்டிர பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அனுமன் கோஷங்கள் மகாராஷ்டிராவில் எழுப்பப்படாமல் பாகிஸ்தான் நாட்டிலா எழுப்பப்படும் என்று கேள்வி எழுப்பினார்,

 மும்பை மாநகராட்சி

மும்பை மாநகராட்சி

தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர், எம்எல்ஏ ரவி ராணா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இருப்பினும், அவர்கள் செயல்பாடுகள் சட்ட ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருந்தாகக் கூறி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதை மறுத்தனர். தற்போது சிவசேனா வசம் இருக்கும் மும்பை மாநகராட்சியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+