சைஃப் அலி கானுக்கு கத்திக்குத்து நடந்தபோது கரீனா கபூர் எங்கிருந்தார்? 10 முக்கிய கேள்விகள் இதோ!
மும்பை: நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக் குத்து நடந்த போது 10 முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது. அதில் ஒன்று கத்திக்குத்தின் போது அவரது மனைவி கரீனா கபூர் கான் எங்கிருந்தார் என்ற கேள்வி எழுந்தது.
மும்பை பாந்த்ராவில் உள்ள சைஃப் அலிகானின் வீட்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கு சென்ற மர்மநபர் ஒருவர் சைஃப்பை கடுமையாக தாக்கி கத்தியால் குத்தினார்.

இதனால் அவருக்கு 6 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலும் ஒரு காயம் அவருடைய முதுகு தண்டுவடத்திற்கு அருகே உள்ளது. கத்தியால் குத்தி விட்டு ஓடிய நபர் யார் என தெரியவில்லை, அவர் எப்படி உள்ளே வந்தார் என்பதும் கேள்வியாக உள்ளது.
இதைத் தொடர்ந்து சைஃப் அலிகான் அதிகாலை 3.30 மணிக்கு லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போதைய தகவலின் படி சைஃப் அலிகான் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்கிறார்கள்.
கத்திக்குத்தின் போது தனது குடும்பத்தினரை அந்த நபர் தாக்காமல் இருக்க சைஃப் அலிகான் அரணாக இருந்தார். இந்த விவகாரத்தில் 10 முக்கிய கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.
சைஃப் அலிகான் தாக்குதலின் போது எங்கிருந்தார்: நடிகர் சைஃப் அலிதான் தனது வீட்டில் 7ஆவது மாடியில் இருந்தார். அவர் தனது குழந்தைகளின் அறையில் இருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் அதிகாலை 2.30 மணிக்கு நடந்தது.
சைஃப் அலிகான் தாக்கப்பட்டது ஏன்?: சைஃப் அலிகானின் மனைவி கரீனா கபூரின் அறிக்கையில் எங்கள் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கொள்ளையடிக்கும் நோக்கில் நுழைந்தார். எனினும் போலீஸார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தகவல் தெரிவித்துள்ளார்.
சைஃப் அலிகான் எப்படி தாக்கப்பட்டார்: பாந்த்ரா இல்லத்திற்குள் நுழைந்த மர்ம நபர் , சைஃப் அலிகானை கத்தியால் குத்தினார்.தோள் பட்டை, முதுகுதண்டு வடம் உள்ளிட்ட பகுதிகளில் சைஃப் அலிகான் கடுமையாக தாக்கப்பட்டார்.
கரீனா கபூர் எங்கிருந்தார்: கரீனா கபூர், அவரது குழந்தைகள் தைமூர், ஜே உள்ளிட்டோர் மீது அதிர்ஷ்டவசமாக எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. கடந்த புதன்கிழமை இரவு தனது சகோதரி கரீஷ்மா கபூர், சோனம் கபூர் ஆகியோருடன் இருந்தார். ஆயினும் தாக்குதல் சம்பவம் நடந்த போது கரீனாவும் அவருடைய குழந்தைகளும் வீட்டில்தான் இருந்தார்கள்.
சைஃப்பை தவிர வேறு யாருக்கு காயம்?: சைஃப் அலிகானுக்கு கத்திக் குத்து ஏற்பட்ட போது பெண் ஊழியருக்கு காயம் ஏற்பட்டது.
சைஃப் அலிகானின் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்கிறார்களா?: ஆமாம். சைஃப் அலிகான் குடும்பத்தினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போலீஸார் சொல்வது என்ன?: சைஃப் அலிகானின் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடந்த போது 2 மணி நேரத்திற்கு முந்தைய சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது வெளியாட்கள் யாரும் உள்ளே வருவது போல் தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்த இரு மணி நேரத்திற்கு முந்தைய போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸார் தேடி வருகிறார்கள்.
சைஃப் அலிகான் எப்படி இருக்கிறார் : 3 இன்ச் ஆழமுள்ள கத்தி சைஃப் அலிகான் உடலில் குத்தப்பட்டுள்ளதால் லீலாவதி மருத்துவமனையில் அவருக்கு நரம்பியல் துறை நிபுணர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்தது. தற்போது சைஃப் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என மருத்துவமனைகள் தெரிவித்தன.
சைஃப் அலிகானை யாரெல்லாம் பார்த்தார்கள்: இயக்குநர் சித்தார்த் ஆனந்த், அவரது மனைவி குணால் கோஹ்லி ஆகியோர் சைஃப்பை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
சிசிடிவி காட்சியில் தெரிவது என்ன?: போலீஸாரின் அறிக்கையின்படி சைஃப் வீட்டில் அவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு பதிவான சிசிடிவி காட்சிகளில் யாரும் வீட்டினுள் நுழைவது போல் இல்லை. எனினும் போலீஸார் மேலும் சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications