முழு கண்ட்ரோலை எடுக்கும் அஜித் பவார் மனைவி.. என்சிபி எதிர்காலமே இவர் தான்.. யார் இந்த சுனேத்ரா?
மும்பை: மகாராஷ்டிர அரசியல் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. அப்படித் தான் அங்கு இப்போது ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அஜித் பவார் மறைவால் ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் துக்கத்தில் இருக்கும் அதேநேரம் என்சிபி எதிர்காலம் என்னவாகும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதற்கிடையே அஜித் பவார் மனைவி சுனேத்ரா கட்சி வழிநடத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.
பாராமதியில் நிகழ்ந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் திடீர் மறைவு, மாநில அரசியலிலும், அவரது கட்சியான தேசியவாத காங்கிரஸிலும் (என்சிபி) பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்சிபியில் பல மூத்த தலைவர்கள் இருந்தாலும், தற்போது அஜித் பவாரின் மனைவி மற்றும் ராஜ்யசபா எம்.பி. சுனேத்ரா பவார் மீது கவனம் திரும்பியுள்ளது.

சுனேத்ரா பவார்
சுனேத்ரா பவார், என்சிபியிலும் மகாராஷ்டிரா அரசியலிலும் ஒரு பெண் ஆளுமையாக உருவெடுக்கலாம். மராத்வாடாவின் தாராசிவ் பகுதியைச் சேர்ந்த இவர், அரசியல் செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். முன்னாள் மாநில அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான பத்மசிங் பாட்டீலின் சகோதரி தான் இந்த சனேத்ரா பவார்.!
1985-ஆம் ஆண்டு அஜித் பவாரை மணந்த சுனேத்ரா, நீண்ட காலமாக 'பவார் குடும்பத்தின் மருமகள்' என்றே அறியப்பட்டார். பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகியே இருந்தார். ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் நுழைந்தார். தன் நாத்தனாரும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலேவுக்கு எதிராக பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இப்போட்டியில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சுனேத்ரா தோல்வியடைந்தார்.
பின்னணி
அரசியலில் பெரிதாக ஆக்டிவாக இல்லாவிட்டாலும், சுனேத்ரா பவார் கூர்மையான புத்திசாலித்தனம் கொண்டவராகவே அறியப்படுகிறார். பாராமதி மற்றும் மராத்வாடா பகுதிகளில் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவாராம்.. விவசாயப் பின்னணி கொண்ட அரசியல் குடும்பத்திலிருந்து வந்த இவருக்குச் சமூக சேவகி, தொழிலதிபர், மற்றும் கல்வி நிர்வாகி என பல முகங்கள் உள்ளது. தனக்கென ஒரு தனிப்பட்ட அரசியல் மற்றும் சமூகப் பாதையைக் கொண்டவராக இருக்கிறார்.
தற்போது பாராமதி ஜவுளி நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். 2011 முதல் பிரான்சில் உள்ள உலக தொழில்முனைவோர் மன்றத்தின் சிந்தனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், சரத்பவாரால் நிறுவப்பட்ட "வித்யா பிரதிஷ்டான்" என்ற கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். இந்த அறக்கட்டளை 25,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி அளிக்கிறது.
சுனேத்ரா தேர்தல் அரசியல்
முன்பே குறிப்பிட்டது போல சுனேத்ரா பவார் 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் மகாராஷ்டிராவிலிருந்து ராஜ்யசபாவுக்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் அஜித் பவாரின் மறைவுக்குப் பிறகு, என்சிபியில் தலைமைப் பொறுப்பை சுனேத்ரா பவார் ஏற்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
ஆதரவு இருக்கும்
என்சிபியில் பிரபுல் படேல், ஓபிசி சமூகத்தின் முக்கிய தலைவரான சாகன் புஜ்பால், மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் போன்ற பல மூத்த தலைவர்கள் இருந்தாலும், அஜித் பவாரின் என்சிபி பிரிவின் வருங்காலத் தலைவராக சுனேத்ரா பவார் தான் இருப்பார். பொதுமக்களிடமிருந்தும் தொண்டர்களிடமிருந்தும் ஆதரவும் இருக்கும்.
மேலும், மகாராஷ்டிரா அரசியலில் குடும்ப அரசியலில் எப்போதும் ஆண்களே கட்சிக்குத் தலைமை ஏற்கும் நிலையில், பெண்களுக்குத் தலைமை வாய்ப்பு கிடைக்காது. அதை மாற்றும் நபராக சுனேத்ரா உருவெடுக்கலாம்!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications