மாமனார் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. 76 வயசாகுது.. துடிதுடித்து போன மருமகள்.. கொடுமை..!
மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாமனாரை போலீசார் தேடி வருகிறார்கள்
மும்பை: ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்து மருமகளை தாறுமாறாக சுட்டு தள்ளிவிட்ட மாமனாரை இப்போது காணோமாம்.. போலீசார் அவரை தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், தானேவை அடுத்த ரபோடி பகுதியைச் சேர்ந்தவர் காசிநாத் பாண்டுரங் பாட்டீல். இவருக்கு 76 வயதாகிறது. இவரது மருமகளுக்கு 42 வயதாகிறது.
இவரது மகன்களுக்கு கல்யாணமாகி 42 வயது மற்றும் 40 வயதில் இரு மருமகள்கள் உள்ளனர்.. மற்றும் பேரபிள்ளைகளும் இருக்கின்றனர்,

மருமகள்
வழக்கமாக இவருக்கு காலை டிபன் மற்றும் டீ இரண்டையும் மருமகள் தருவது வழக்கம்.. ஆனால் நேற்று முன்தினம் காலை 11:30 மணி ஆகியும் அவருக்கு மருமகள் டிபன் தரவில்லை... டீயும் போட்டு தரவில்லையாம்.. இதன் காரணமாக மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த மாமனார், உடனே துப்பாக்கியை எடுத்து தன்னுடைய மருமகளை சுட்டு தள்ளிவிட்டார்.. இதில், அந்த பெண்ணின் அடி வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்..

துப்பாக்கி சூடு
இதை பார்த்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்து, மருமகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் போலீஸ் உயரதிகாரி சொல்லும்போது, "மருமகள் டீயுடன் காலை உணவு கொடுக்காத காரணத்தால் கோபமடைந்த மாமனார், மருமகளை சுட்டதாகத் தெரிகிறது... துப்பாக்கியால் சுட்டதால் 42 வயதான அந்தப் பெண்ணுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது... அதனால் அந்தப் பெண் தானேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்றார்.

மரணம்
இதனிடையே, சிகிச்சை பெற்று வந்த பெண்ணை டாக்டர்கள் எவ்வளோ முயற்சி செய்தும், காப்பாற்ற முடியவில்லை.. பரிதாபமாக இறந்துவிட்டார்.. நடந்த சம்பவம் குறித்து காசிநாத் பாண்டுரங்கின், இன்னொரு மருமகள் போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின்பேரில், காசிநாத் பாண்டுரங்கன் மீது ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 506 (மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் அவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை.. காரணம், இந்த துப்பாக்கி சூட்டிற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்...

அதிர்ச்சி
அதுமட்டுமல்ல, இன்னொரு மருமகள் போலீசுக்கு போனதுமே, மாமனார் தப்பித்து ஓடிவிட்டார்.. இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. தற்போது கொலை வழக்காக இதை பதிவு செய்த போலீசார், அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள். உணவு வழங்காத காரணத்தினால் மருமகளையும், மகனையும் கத்தியால் தாக்கிய சம்பவம் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்தது.. ஆனால், டிபனில் டீ தராத காரணத்திற்காக, துப்பாக்கியை எடுத்து ஆளையே காலி செய்த சம்பவம் இப்போதுதான் முதல்முறையாக நடந்துள்ளது.. மகாராஷ்டிரா மாநில மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications