EY இந்தியாவில் ஒரு கோடி சம்பளம்.. நெஞ்சு வலி நாடகம் போட்டு.. ஒரே நாளில் ஓடி வந்த பாரத் பே நிறுவனர்
மும்பை: ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் ஒரே நாளில் EY இந்தியா நிறுவனத்தை விட்டு வெளியேறியது ஏன் என்பது குறித்து பாரத் பே இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் பேசிய பழைய வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது. எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY இந்தியா) நிறுவன ஊழியர் அன்னா செபாஸ்டியன் அதிகப்படிய வேலை அழுத்தம் காரணமாக இறந்துபோன நிலையில், இந்த வீடியோ தற்போது பேசுபொருளாகி உள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு EY இந்தியா நிறுவனத்தின் புனே அலுவலகத்தில் 26 வயதான அன்னா செபாஸ்டியன் என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவர் கடுமையான பணி அழுத்தங்களைத் தாங்கி வேலை செய்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஜூலை மாதம் இறந்தார்.

இதுபற்றி அன்னா செபாஸ்டியனின் தாய், எழுதிய கடிதத்தில், "அதிக வேலை பளு" காரணமாக தனது மகள் இறந்துவிட்டாள். EY நிறுவனம் ஊழியர்களின் உடல் நலனை பற்றி அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் அந்த கடிதத்தில் , தன் மகளின் இறுதிசடங்கில் EY நிறுவனத்தில் இருந்து யாருமே கலந்து கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்களைத் தடுக்க, பணி கலாச்சாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிறுவனத்தினை வலியுறுத்தினார்.
மேலும் தனது கடிதம் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புவதாக கூறிய அந்த தாய், எங்கள் குடும்பம் போல் வேறு எந்த குடும்பமும் இது போல பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த கடிதத்தை தான் எழுதுவதாகவும் கூறினார். இந்த தாயின் மனக்குமுறல் இந்தியா முழுவதும் ஐடி வேலைகள் பற்றி அச்சத்தை விதித்தது.
மேலும் பலர் EY நிறுவனம் மாதிரியான அவுட்சோர்ஸ் ஐடி நிறுவனங்களின் டாக்ஸிக் வேலை கலாச்சாரத்தை கடுமையான எதிர்த்து கருத்துக்களை பதிவிட தொடங்கினார்கள். மகாராஷ்டிராவை தாண்டி நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்திய தாயின் குமுறலுக்கு மத்திய அரசே ஒரு கட்டத்தில் பதில் அளித்தது. இந்த விவகாரத்தில் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளது.
பல்வேறு கண்டன குரல்களுக்கு பின்னர் , EY இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் மேமானி, இளம் பெண் வேலை அழுத்தம் காரணமாக இறந்த விவகாரம் பற்றி பதில் அளித்தார். அதில் தனது நிறுவனத்தில் வேலை செய்வோருக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் வரை இனி நான் ஓய்வெடுக்க மாட்டேன்" என்று உறுதியளித்துள்ளார். அன்னா செபாஸ்டியனின் இறுதிச் சடங்கில் EY நிறுவனத்தைச் சேர்ந்த யாரும் கலந்து கொள்ளாததற்கு வருத்தம் தெரிவித்த ராஜீவ் மேமானி, "இது நமது கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியமானது" என்று தெரிவித்தார்.
EY இந்தியாவை போல் பல்வேறு அவுட் சோர்ஸ் ஐடி நிறுவனங்களில் (அதாவது வெளிநாட்டில் உள்ள ஐடி நிறுவனங்களிடம் வேலைகளை எடுத்து செய்யும் இந்திய நிறுவனங்கள்) டாக்ஸிக் ஒர்க் கலாச்சாரம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதவாது அதிகப்படியான வேலை அழுத்தம் இருக்கும் என்றும், கடுமையான வேலைப்பளு மற்றும் மனஅழுத்ததைத் அதிகரிக்கும் சுற்றுப்புறச்சூழல் இருக்கும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
EY இந்தியா நிறுவனம் மற்றும் அதன் வேலை கலாச்சார முறைகள் பற்றி பாரத் பே இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் பற்றி பேசும் பழைய வீடியோ சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில், EY இந்தியா நிறுவனத்தில் ₹ 1 கோடி சம்பள பேக்கேஜ் பெற்ற போதிலும் ஒரே நாளில் EY இந்தியா நிறுவனத்தில் இருந்து ஏன் வெளியேறினார் என்பது பற்றி பகிர்ந்துள்ளார். அதில் அஷ்னீர் குரோவர் தனது முதல் நாளிலேயே EY யிலிருந்து எப்படி வெளியேறினார் என்பதை விளக்குவதாக உள்ளது.
அஷ்னீர் குரோவர் கூறுகையில், "நான் அன்று ஒரு நாள் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றேன். நிறுவனத்தில் வேலை செய்பவர்களை சுற்றிப் பார்த்தேன். உடனே நெஞ்சு வலி இருப்பது போல் நடித்தேன்.ஏனெனில் அங்குள்ள ஆபிஸ் வேலை சூழல் மயான அமைதியுடன் அச்சம் தரும் வகையில் இருந்தது. ஊழியர்கள் இறந்தவர்கள் போலவும், பிணம் போலவும் அமைதியாக இருந்தார்கள்" என்றார்.
அதேநேரம் அங்கிருந்த "டாக்ஸிக்" வேலை கலாச்சாரம் உள்ள அலுவலகங்கள் தான் சிறந்த அலுவலகங்கள் என்று அவர் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வீடியோவில் முன்வைத்தார், ஏனெனில் தன்னை பொறுத்தவரை, அங்குதான் வேலை சிறப்பாக நடக்கிறது என்று அஷ்னீர் குரோவர் கூறியிருந்தார். இந்த வீடியோவை பிரபல கோடீஸ்வர தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், அதில் அவர் "மிக மோசமான பணிச்சூழலை" அஷ்னீர் குரோவர் ஊக்குவிக்கிறார். இதுபோன்ற டாக்ஸிக் ஒர்க் கலாச்சாரத்தை யாரேனும் ஆதரித்து அதற்காக பேசுவதை பார்க்கும் போது தனக்கு ஆச்சர்யமாக இருப்பதாக கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications