சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்.. நடிகையின் நண்பர் போலீஸில் சாட்சியம்
மும்பை: நெருக்கமான படங்களை வெளியிடுவதாக நடிகை வைஷாலி தக்கரை முன்னாள் காதலன் மிரட்டியதாக நடிகையின் நண்பரான நிஷாந்த் சிங் தெரிவித்துள்ளார்.
சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி, ரக்ஷாபந்தன், கா, சசுரல் சிமர் போன்ற இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்தார். இவருக்கு 30 வயதாகிறது.
இவர்சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் படுஆக்டிவ்வாக இருந்தார். இவரை 5 லட்சத்திற்கும் மேலானோர் பின் தொடர்கிறார்கள். இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள், ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.

வைஷாலி
இந்த நிலையில் வைஷாலிக்கு அவருடைய காதலன் டாக்டர் அபிநந்தனுடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் ஜூனில் திருமணம் முடிவான நிலையில் அந்த காதல் முறிந்துவிட்டது.

சாப்ட்வேர் என்ஜினியர்
இதையடுத்து அவர் அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியருடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்த நிலையில்தான் இந்தூரில் உள்ள தனது வீட்டில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பகீர் தகவல்கள்
அவர்கள் அங்கிருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் அவர் ராகுல் என்பவர் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த ராகுல் தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராகுல் தன்னை டார்ச்சர் செய்வது அனைத்தும் அவரது மனைவி திவ்யாவுக்கு தெரியும். ஆனால் தன் கணவனை காப்பாற்றுவதற்காக பொதுவெளியில் என்னை அசிங்கமாக திட்டினார்.

இரு ஆண்டுகள் சித்ரவதை
ராகுலும் திவ்யாவும் என்னை இரண்டு ஆண்டுகளாக சித்ரவதை செய்து வந்தனர். அதனால்தான் நான் இந்த முடிவிற்கு நான் வந்துவிட்டேன். என்னை அப்பாவும் அம்மாவும் மன்னிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் எழுதியிருந்தார். இதையடுத்து தலைமறைவாக இருந்த ராகுலை போலீஸார் கைது செய்தனர். அவரது மனைவியும் தலைமறைவாக இருந்தார்.

தற்கொலைக்கான காரணம்
இந்த நிலையில்தான் தற்கொலைக்கான காரணத்தை வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் மல்கானி என்பவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் வைஷாலியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டி ராகுல் மிரட்டியுள்ளார். அதே போல் டாக்டர் அபிநந்தன் மட்டுமில்லை வேறு யாரை திருமணம் செய்து கொண்டாலும் வைஷாலி தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அவரிடம் காட்டுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் வைஷாலியை எங்கேயும் வெளியே செல்லவிடாமல் ராகுல் சித்ரவதை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்குள்ளான வைஷாலி தற்கொலை செய்து கொண்டார் என நிஷாந்த் போலீஸில் தெரிவித்துள்ளார்.
-
காந்தாரா விவகாரம்.. கோவிலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்.. எதிர்பாராத சம்பவம்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications