எப்போதும் சூறாவளியாக சுற்றும் மோடி.. இந்த முறை மகாராஷ்டிராவில் பெரியளவில் பிரச்சாரம் செய்யாதது ஏன்?
மும்பை: நமது நாட்டில் எங்குச் சட்டசபைத் தேர்தல் நடந்தாலும் நரேந்திர மோடி தான் பாஜக பிரச்சாரத்தை முன்னெடுப்பார். ஆனால், மகாராஷ்டிராவில் நிலைமை அதற்கு நேர்மாறாக இருந்தது. மோடி உள்ளிட்ட தேசிய பாஜக தலைவர்கள் குறைவான அளவிலேயே பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்ட நிலையில், மாநில பாஜக தலைவர்களே பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில், அவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக நாளை நவ. 20ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

மகாராஷ்டிரா: பாஜக வலிமையாக இருக்கும் மாநிலங்களில் பிரதானமானது மகாராஷ்டிரா. அங்கு என்ன தான் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தாலும் பாஜகவுக்கு தான் அதிகபட்ச எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக இருக்கிறது. இதன் காரணமாகவே பல மாதங்களாக அங்குத் தேர்தல் பணிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம் மகாராஷ்டிராவில் இந்த முறை பாஜக தனது வழக்கமான ஸ்டைலில் பிரச்சாரம் செய்யவில்லை. பொதுவாகவே எங்கு தேர்தல் நடந்தாலும் பாஜக பிரச்சாரத்தை நரேந்திர மோடி தான் முன்னெடுப்பார். அதிலும் பாஜக வலிமையாக இருக்கும் மாநிலங்களில் மோடியை முன்வைத்தே பாஜக வாக்கு கேட்கும். இதுவே கடந்த காலங்களில் பாஜகவின் ஸ்டைலாக இருந்துள்ளது.
புதிய யுக்தி: ஆனால், இந்த முறை புதிய யுக்தியை பாஜக கையாள்கிறது. அங்கு மாநில பாஜக தலைவர்களும் ஆர்எஸ்எஸ் தலைவர்களுமே பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது. தேசிய தலைமை கூடுதல் உதவிகளை மட்டுமே செய்கிறது. குறிப்பாக மகாராஷ்டிர பாஜக முகமாக இருக்கும் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மாநில பாஜக தலைவரும் ஓபிசி பிரிவினரிடையே செல்வாக்கு பெற்றவருமான சந்திரசேகர் பவான்குலே தான் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதேநேரம் பிரதமர் மோடி மொத்தமாகவே 10 தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார். அவர் மட்டுமின்றி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் எல்லாம் சேர்ந்தே 40- 50 பொதுக்கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று இருக்கிறார்கள். அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் மகாராஷ்டிர பிரச்சாரத்தை முழுக்க முழுக்க அம்மாநில பாஜக தலைவர்களே முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
என்ன காரணம்: முன்னதாக ஹரியானாவிலும் இதே ஸ்டைலை தான் பாஜக கையாண்டது. பிரதமர் மோடி ஆறு பொதுக்கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் இணைந்து தான் முழுக்க முழுக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதேபோல இங்கு ஃபட்னாவிஸ் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் நிலையில், அவருடன் ஆர்எஸ்எஸில் இருந்து வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் பிரச்சாரம் செய்கிறார். குறிப்பாக விதர்பா பகுதியில் நிதின் கட்கரி பிரச்சாரம் செய்து வருகிறார்.
பலன் தருமா: கடந்த லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக அதிக இடங்களில் வெல்லவில்லை. ஆர்எஸ்எஸ் தரப்பு இறங்கி வேலை செய்யாததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது. இந்த முறை மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது என்பதில் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தெளிவாக இருக்கிறது. இதனால் ஆர்எஸ்எஸும் தனியாக வழக்கம் போலப் பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது.
இப்படி முழுக்க முழுக்க புதிய பிரச்சார யுக்தியுடன் பாஜக களமிறங்கியிருக்கிறது. அதேநேரம் இந்த புதிய யுக்தி கை கொடுக்குமா இல்லையா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications