அயோத்தியில் குண்டு வெடிக்கும்.. பிரதமர் மோடிக்கு குறி! தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ மிரட்டல் கடிதம்! பரபர
மும்பை: தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சேர்ந்த சிலர் பாஜக எம்எல்ஏ ஒருவருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு அதிகாரிகள் நாடு முழுக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன
ஆபரேஷன் ஆக்டோபஸ் என்ற மெகா ரெய்டில் நாடு முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 106 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

5 ஆண்டு தடை
பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஐஎஸ் பயங்கரவாதிகள் உடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து கடந்த செப். 22இல் அந்த அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்தது.

மிரட்டல் கடிதம்
இந்நிலையில் மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ விஜய் தேஷ்முக் என்பவருக்கு பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த சிலர் மிரட்டல் கடிதம் எனுப்பி உள்ளனர். இது தொடர்பாக விஜய் தேஷ்முக் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து உள்ளார். பிஎஃப்ஐ அமைப்பின் முகமட் ஷஃபி பிராஜ்தார் என்பவர் இந்தக் கடிதத்தை எழுதி உள்ளதாகவும் அதில் தனது தலையைத் துண்டித்து விடுவதாக மிரட்டி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

அயோத்தி
இந்தியில் எழுதப்பட்டு உள்ள அந்த கடிதத்தில் பிஎஃப்ஐ அமைப்பின் கொடியும் இடம்பெற்று உள்ளது. அதில் பாஜக எம்எல்ஏவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலான வாசகங்கள் இடம் பெற்று உள்ளது. மேலும், அயோத்தி ராம் கோயில், கிருஷ்ண ஜென்ம பூமி போன்ற முக்கிய இந்து கோவில்களைத் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகவும் பிஎஃப்ஐ அனுப்பிய மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முக்கிய அரசியல்வாதிகளைக் கண்காணித்து வருவதாகவும் பிஎஃப்ஐ அமைப்பு தனது மிரட்டல் கடிதத்தில் கூறி உள்ளதாகவும் பாஜக எம்எல்ஏ தனது புகாரில் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சோலாப்பூர் போலீசார், இது குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

தடை
மத்திய அரசு கடந்த செப். 22ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குத் தடை விதித்தது. அடுத்து 5 ஆண்டுகள் இந்த தடை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. பிஎஃப்ஐ மட்டுமின்றி அதன் பிற அமைப்புகளுக்கும் உபா பிரிவின் கீழ் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (ஆர்ஐஎஃப்), கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்), ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் (ஏஐஐசி), தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட் உள்ளிட்ட அமைப்புகளும் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications