கூட்டணி எல்லாம் வேண்டாம்.. பெரிய ரிஸ்க் எடுக்கும் காங்கிரஸ்.. இதுவே கடைசி சான்ஸ்.. கரை சேர முடியுமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் அடுத்த வாரம் மும்பை உட்பட உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டு இருக்கிறது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச சீட்களில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், இது அவர்களுக்கு என்ன மாதிரியான பலனைத் தரும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

மகாராஷ்டிராவில் மும்பை, புனே, தானே உள்ளிட்ட நகர்ப்புறங்களில் அடுத்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் பல மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும் சூழலில், இந்தத் தேர்தல் கவனம் பெறுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தான் மிகவும் இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டுள்ளது.

Maharashtra Congress

உள்ளாட்சித் தேர்தல்

கடந்த மாதம் மகாராஷ்டிராவில் பல ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஷிண்டே சிவசேனா மற்றும் அஜித் பவார் என்சிபி தனித்தே போட்டியிட்டன. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் நிலைமையே வேறு. பாஜக மற்றும் ஷிண்டே சிவசேனா கூட்டணி அமைத்தே போட்டியிடுகின்றன. மும்பையில் 227 சீட்கள் உள்ள நிலையில், பாஜக 130 சீட்களிலும் ஷிண்டே சிவசேனா 90 சீட்களில் போட்டியிடுகிறது. என்சிபி தனித்துப் போட்டியிட்டாலும் புனே உள்ளிட்ட சில பகுதிகளில் சரத் பவாரின் என்சிபி உடன் கை கோர்த்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தனித்து போட்டி

காங்கிரஸை பொறுத்தவரை இந்த தேர்தலில் தனித்தே போட்டியிடுகிறது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. சரத் பவார் கட்சி முன்பே சொன்னது போலச் சில இடங்களில் அஜித் பவார் உடன் இணைந்து போட்டியிடுகிறது. இதனால் சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை. தாக்கரே தரப்பு காங்கிரஸை பல முறை கூட்டணிக்கு அழைத்தும் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதற்குக் காரணம் ராஜ் தாக்கரே தான்.

பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் தனித்தனியாகவே பயணித்து வந்தனர். ஆனால், மும்பை தேர்தலில் இரு சகோதரர்களும் ஒன்றாக கை கோர்த்துள்ளனர். ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சி உடைக்கும் முன்பு சிவசேனா கோட்டையாகவே மும்பை இருந்துள்ளது. இதனால் தனது அடையாளத்தை மீட்கும் கடைசி முயற்சியாக இந்த தேர்தலை உத்தவ் தாக்கரே தரப்பு பார்க்கிறது. இதன் காரணமாகவே 20 ஆண்டு மோதலைத் தள்ளிவைத்துவிட்டு தாக்கரே சகோதரர்கள் இணைந்துள்ளனர்.

காரணம் என்ன

ஆனால், ராஜ் தாக்கரே வருகையைக் காங்கிரஸ் ஏற்கவில்லை. ராஜ் தாக்கரே மராத்தி இன அடிப்படையில் அரசியல் செய்பவர். மேலும், தீவிர இந்துத்துவத்தை முன்னெடுப்பவர். அவரது கட்சியினர் மராத்தி மொழியைப் பேசவில்லை எனப் பலரையும் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. மும்பையில் மகாராஷ்டிராவைச் சேராதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ராஜ் தாக்கரே வருகை வேறு மாநிலத்தவரின் வாக்குகளைப் பெறத் தடையாக இருக்கும் எனக் காங்கிரஸ் கருதுகிறது. மேலும், சிறுபான்மையினர் சமூகத்தினர் வாக்குகளும் ராஜ் தாக்கரேவால் கிடைக்காமல் போகும் எனக் காங்கிரஸ் அஞ்சுகிறது.

கரை சேருமா காங்கிரஸ்?

இதன் காரணமாகவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ்.! சுமார் 500+ சீட்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தவர்களைச் சேராத வட மாநிலத்தவரைக் கவரும் வகையில் தனியாகத் தேர்தல் அறிக்கையையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அங்குக் கடந்த 20 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிடும் அதிகபட்ச இடங்கள் இதுவாகும்! கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் தனித்துவிடப்பட்ட காங்கிரஸ் பெரிய ரிஸ்க் எடுத்துள்ள நிலையில், அதற்குப் பலன் கிடைக்குமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+