மாறும் ரூல்ஸ்! ஏப்ரல் 1க்கு பின் உங்க கூகுள்பே, போன்பே வேலை செய்யுமா? கண்டுபிடிப்பது எப்படி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த சில ஆண்டுகளாகவே யுபிஐ சேவை பரவலாக அதிகரித்து வரும் நிலையில், யுபிஐ பேமெண்ட்டுகளை கையாளும் என்பிசிஐ முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட யுபிஐ ஐடிக்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படாது. உங்கள் யுபிஐ ஐடி செயல்படுமா இல்லையா.. அதைக் கண்டுபிடிப்பிருப்பது எப்படி! வேலை செய்யாது என்றால் அதைச் சரி செய்வது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்த காலத்தில் யுபிஐ சேவைகள் பரவலாக அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம் பெட்டிக் கடை முதல் மால் வரை எங்குச் சென்றாலும் யுபிஐ மூலமாகவே பணம் செலுத்த விரும்புகிறோம். சில்லறை பிரச்சினை தொடங்கி திருட்டு பயம் எனப் பல சிக்கல்களைத் தீர்ப்பதாலேயே யுபிஐ ஐடிக்களை மக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Bank UPI

இதற்கிடையே யுபிஐ பேமெண்ட்டுகளை கையாளும் என்பிசிஐ முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட யுபிஐ ஐடிக்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஐடிக்கள் எல்லாம் செயல்படாது.. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

யுபிஐ ஐடிகள் செயல்படாது

இந்த அறிவிப்பின்படி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செயலற்ற மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடிகளை டிலிங்க் செய்யவுள்ளதாக என்பிசிஐ அறிவித்துள்ளது. இதனால் கூகுள் பே, போன்பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்வோர் தங்கள் மொபைல் எண்கள் இன்ஆக்டிவாக இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். இன்ஆக்டிவாக இருந்தால் உங்கள் யுபிஐ ஐடிக்கள் முடக்கப்படலாம்.

அதன்படி உங்கள் செல்போன் எண் கணிசமான காலத்திற்கு இன்-ஆக்டிவாக இருந்தால், வங்கிகள் ரெக்கார்ட்டில் இருந்து அவை அழிக்கப்படும்.. மேலும், குறிப்பிட்ட அந்த நம்பருக்கான யுபிஐ சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.. வங்கி நெட்வொர்க்கில் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்க்கவும், மோசடி அபாயத்தைக் குறைக்கவும் வங்கிகள் இந்த நடவடிக்கைகளை எடுக்கின்றன.

என்ன காரணம்

இப்போது குறிப்பிட்ட காலத்திற்கு இன் ஆக்டிவாக இருக்கும் நம்பர்களை டெலிகாம் நிறுவனங்கள் மறு ஒதுக்கீடு செய்து வருகின்றன. அப்படி ஒதுக்கும்போது இந்த நம்பர்கள் வேறு வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடையதாக இருந்தால் அதை வைத்து மோசடிகள் நடக்கலாம். இதைத் தடுக்கவே வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

யாருக்கு செயல்படாது!

வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களை மாற்றிவிட்டார்கள். ஆனால், வங்கிக் கணக்குகளில் அதை அப்டேட் செய்யவில்லை என்றால் அவர்களின் யுபிஐ கணக்கு முடக்கப்படும்.

இன்-ஆக்டிவ் அல்லது மீண்டும் ஒதுக்கப்பட்ட மொபைல் எண்ணுடன் கூடிய யுபிஐ சேவைகளை யூசர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதுவும் பாதிக்கப்படும்.

வங்கிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் லிங்க் செய்த சிம் கார்ட்டை யூஸ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களின் சேவையும் பாதிக்கப்படும்.

என்ன செய்ய வேண்டும்?

வங்கியில் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண் செயல்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் உங்கள் புதிய எண்ணை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளவும்.

உங்களின் பழைய செல்போன் நம்பருடன் எதாவது வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+